MP தேர்தல் முடிவுகள் 2023: மாஸ்டர்மைண்ட் சசிகாந்த் எங்கே? மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மிஸ் செய்த தமிழர்!!
சென்னை; கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்த சசிகாந்த் செந்திலை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெகுவாக மிஸ் செய்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் நேற்று நடந்தது. இதில் மிசோரம் தவிர 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர தொடங்கி உள்ளன.
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் தற்போது வரை 43 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 27 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இது தொடக்க கட்ட தபால் வாக்குகள் முன்னிலை நிலவரம் ஆகும். மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.
மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. இப்போது மீண்டும் அங்கே பாஜக தொடக்க முன்னிலை பெற்று... காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் பின்னடைவு: காங்கிரஸ் பின்னடைவை சந்திக்க அங்கே கவர்ச்சியான முகம், சரியான திட்டமிடல் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்த சசிகாந்த் செந்திலை போன்ற நபரை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெகுவாக மிஸ் செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். 2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்டது. உதவி ஆணையராக இவர் பணியாற்றினார்.
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த போது பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததாக கூறப்படுகிறது.
பாஜகவிற்கு எதிர்: பாஜகவின் சில கோரிக்கைகளை இவர் கேட்க மறுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தலையாட்டி பொம்மையாக இல்லமால் இவர் நேர்மையான தலைவராக இருந்துள்ளார். முக்கியமாக தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
மோடி: முக்கியமாக பிரதமர் மோடி மீது நேரடியாக பல குற்றச்சாட்டுகளை சசிகாந்த் செந்தில் அப்போது வைத்தார். அங்கே பாஜக பல ஊழல்களை செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார். அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது. தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார். முக்கியமாக கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.
என்னென்ன பணி? முக்கியமாக நவீன ஆன்லைன் பணி, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்வது, வேட்பாளர்கள் பற்றிய இமேஜை உருவாக்குவது என்று சிறப்பான பணிகளை மேற்கொண்டார். இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்ற து. இன்னொரு பக்கம் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த் தான் வெற்றிபெற்றார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கியமான காரணமாக இவர் இருந்தார்.
ராஜஸ்தான் தேர்தல் பணி: ஆனால் இந்த முறை 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான் தேர்தலுக்கு வார் ரூம் பொறுப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார். அவர் மத்திய பிரதேசத்திற்கு செல்லவே இல்லை. ராஜஸ்தானில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கருதும் நிலையில் மத்திய பிரதேசத்தில் இவரை போன்றவர்கள் களமிறக்கப்படாதது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications