சீறிய கனிமொழி.. லோக்சபாவில் ஒலித்த "சட்னி".. திகைத்த பாஜக எம்பிக்கள்.. என்ன நடந்தது?
கனிமொழி இன்று லோக்சபாவில் தக்காளி, வெங்காய சட்னி குறித்து பேசினார்
டெல்லி:நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாத மத்திய அரசுக்கு எதிராக, திமுக உள்ளிட்ட உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனங்களை இருஅவைகளிலுமே பதிவு செய்து வருகின்றனர்.
Recommended Video
அந்த வகையில், இன்றும் லோக்சபாவில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது... அப்போது கனிமொழி பேசும்போது, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும், பல்வேறு கேள்விகளை முன்வைத்தும் பேசினார்.
குறிப்பாக, பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்துள்ளன.. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

தொழிலதிபர்
உணவு வாங்கக் கூட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரு தொழிலதிபர் மட்டும் உலகளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருகிறதே எப்படி? 15 ஆயிரம் ரூபாய் பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே ஒருவர் செலவழிக்க வேண்டியுள்ளது... சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

பென்சில் விலை
ஆனால் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது... விலைவாசி உயர்வு குறித்து சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்... பென்சில் விலை கூட அதிகரித்திருப்பதாக சிறுமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் எத்தனையோ பேர் வேலையிழந்தனர்... மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும்.. நாங்கள் யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை.

சட்னி மட்டுமே போதுமா
மாண்புமிகு பாஜக உறுப்பினர் ரிஷிகாந்த் துவே அவர்கள் பேசும்போது, வெங்காய விலை குறைந்திருக்கிறது.. தக்காளி விலை குறைந்திருக்கிறது அப்படின்னு சொன்னார்.. அது இரண்டையும் வெச்சிக்கிட்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் 3 வேளையும் சட்னி மட்டுமே அரைத்து சாப்பிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.. என்று கேள்வி எழுப்பினார்.. கனிமொழி இவ்வாறு கேள்வி கேட்டதும், அவருக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த திமுக எம்பி தயாநிதி மாறன், மேஜைகளை ஓங்கி தட்டி சிரித்தார்..

சீறினார்
முன்னதாக கனிமொழி பேசும்போது, ஆளும் கட்சி எம்பிக்கள் அவரை பேசவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தனர்.. அப்போது கனிமொழிக்கு திடீரென கோபம் வந்துவிட்டது.. "ஒன்று தமிழில் பேசுங்கள். இல்லையென்றால் ஆங்கிலத்தில் பேசுங்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்திற்கு பேசுவதற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பவில்லை என்று கோபமாக கூறினார்.. கனிமொழியின் இன்றைய லோக்சபா பேச்சுக்கள் சோஷியல் மீடியாவிலும் பரவி வருகின்றன.. அதைக் கேட்ட பலரும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. மேலும் சிலரோ, "அப்படியே இங்கே டாஸ்மாக்கையும் மூட சொல்லுங்க அக்கா" என்று உரிமையாக கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications