இவங்க எங்க இங்கே.. ராதிகாவை பார்த்ததும் சட்டென வியந்த மோடி.. அந்த சிரிப்பு.. என்ன நடந்தது?
டெல்லி: நேற்று டெல்லியில் நடந்த தமிழ் புத்தாண்டு நிகழ்வில் பிரதமர் மோடி நடிகை ராதிகா சரத் குமாரை நேரில் சந்தித்தார்.
டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாஜக இணை அமைச்சர் எல் முருகன் மூலம் கொண்டாடப்பட்டது. எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இந்த மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது.

எல் முருகன் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறிய அளவிலான கலை நிகழ்ச்சிகள், தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டத்தில் நடந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கூட இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாஜகவின் ஏபி முருகானந்தம் போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வை புறக்கணித்தார்.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் சென்று இருந்தனர். பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்கள், நட்பாக இருப்பவர்கள், சினிமா உலக பிரபலங்கள் என்று பலர் சென்று இருந்தனர்.

இந்த நிகழ்வில் ராதிகா சரத் குமாரும் கலந்து கொண்டு இருந்தார். அவர் பிரதமர் மோடி வரும் போது அந்த வரிசையில் நின்று கொண்டு இருந்தார். வரிசையாக பல்வேறு தலைவர்களை பார்த்துக்கொண்டு இருந்த மோடி ராதிகா சரத் குமாரையும் பார்த்தார்.
ஏற்கனவே அவருக்கு ராதிகாவை தெரியும் என்பதால், அவரை பார்த்ததும் மோடி ஒரு புன் சிரிப்பு சிரித்தார்.
பதிலுக்கு ராதிகா சரத்குமாரும் பிரதமர் மோடியை பார்த்து சிரித்து அவருக்கு வணக்கம் வைத்தார். இந்த நிகழ்வு அரசியல் நிகழ்வாக இல்லாமல் கலாச்சார நிகழ்வாக அமைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அரசியல் கடந்தும் கூட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அங்கே இருந்த சினிமா பிரபலங்கள் பலரும் பிரதமர் மோடியை சந்தித்து வணக்கம் வைத்தனர். இதன் காரணமாகவே நேற்று ராதிகா சரத் குமாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் அரசின் நிலைப்பாட்டின் படியும், பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களின் நிலைப்பாட்டின் படியும் தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் சிலரால் சித்திரை 1ம் தேதியும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை 1ம் தேதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க சிலரால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல் தமிழ்நாட்டில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று பாஜக இணை அமைச்சர் எல் முருகன் மூலம் கொண்டாடப்பட்டது. எல் முருகனின் டெல்லி இல்லத்தில் இந்த மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழியை நினைத்து பெருமை கொள்கிறோம். தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications