தென்னிந்தியா வரும் அனைத்து ரயில்களும் இந்த சின்ன ஸ்டேசனில் கண்டிப்பாக நிற்கும்.. ஏன் தெரியுமா?
டெல்லி: வட மாநிலத்தில் இருந்து தென்மாநிலம் வரும் அனைத்து ரயில்களும் பல்ஹர்ஷா என்ற சிறிய ரயில் நிலையத்தில் கட்டாயம் நிற்கும் . அப்படி நிற்கும் அளவிற்கு இது மிகப்பெரிய ரயில் நிலையம் அல்ல. ஆனால் ரயில்வே பணியாளர்களுக்கு இதுதான் மிக முக்கியமான ரயில் நிலையம். இப்படி சொல்ல புவியியல் மற்றும் அறிவியல் ரீதியாக சில காரணங்கள் இருக்கின்றன.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, எர்ணாகுளம், திருவனந்தபுரம் என தென்மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து மேஜர் ரயில்களுமே பல்ஹர்ஷா என்ற சிறிய ரயில் நிலையத்தில் நிற்கும். இதேபோல் வடக்கிலிருந்து டெல்லி, லக்னோ, கான்பூர், போபால், ஜான்சி போன்ற ஊர்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்துமே கண்டிப்பாக பல்ஹர்ஷா ரயில் நிலையத்தில் நிற்கும். எனவே வடக்கில் தெற்கு நோக்கி ரயிலில் பயணிப்பவர்களுக்கு நிச்சயம் இந்த ரயில் நிலையத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். பெரிய நகரங்களில் நிற்க காரணம் இருக்கும். ஆனால் சிறிய ரயில் நிலையமான பல்ஹர்ஷாவில் நிற்க காரணம் என்ன, அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பல்ஹர்ஷாவில் இருக்கிறது என்பதை பார்க்கும் முன், பல்ஹர்ஷாவின் புவியியல் அமைப்பை நாம் கண்டிப்பாக புரிந்துகொள்வோம்.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூரில் (Ballarpur) தான் பல்ஹர்ஷா என்ற பெயரில் ரயில் நிலையம் இருக்கிறது. இது நாக்பூர் மற்றும் காசிப்பேட்டை இடையே அமைந்துள்ள ரயில் நிலையம் ஆகும். காசிப்பேட்டையும், நாக்பூரும் இந்தியாவின் முக்கிய ரயில் நிலைய சந்திப்புகள் ஆகும். வாரங்கல் ரயில் நிலையத்தை தான் காசிப்பேட்டை என்று அழைப்பார்கள். தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் இருந்து 138 கிமீ தூரத்தில் அமைந்துள்ள முக்கியமான ரயில் நிலையம் தான் காசிப்பேட்டை. அதன்பிறகு 277 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இடம் தான் பல்லார்பூர். இங்கிருந்து தான் வட இந்தியா ஆரம்பம் ஆகிறது. ஏன் தென்னிந்தியா இங்கிருந்து தொடங்குகிறது என்று கூட சொல்லலாம். இங்கு உள்ள ரயில் நிலையத்தின் பெயர் தான் பல்ஹர்ஷா. வாரங்கல் ரயில் நிலையத்தை கடந்தால் கிட்டத்தட்ட 460 கிமீ தூரம் கடந்தால் மட்டுமே மிகப்பெரிய நகரமான நாக்பூரை அடையமுடியும் .
இந்த சூழலில் புவியியல் ரீதியாக தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவை இணைக்கும் பல்ஹர்ஷா ரயில் நிலையத்தில், வடக்கிலிருந்து தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து மேற்காக செல்லும் இந்த இடத்தில் அனைத்து ரயில்களும் ஒன்றிணைகின்றன. இங்கு நாள் முழுவதும் 175 க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து போகின்றன இங்கு கிராந்தி போபால் எக்ஸ்பிரஸ் (07619) என்ற ஒரே ஒரு ரயில் மட்டுமே ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும். மீதமுள்ள அனைத்து ரயில்களும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு நிற்கும். இதில் 10 ரயில்கள் 20 நிமிடம் நின்று நிற்கும் சில ரயில்கள் ஐந்து நிமிடம் வரை நிற்கும்.
இங்கு தான் வடக்கில் இருந்து தெற்கு அல்லது எதிர் திசையில் செல்லும் போது இடையில் ரயில்களின் என்ஜின்கள் சரிபார்க்கப்படுகின்றன. பிரேக்குகளையும் ஆய்வு செய்யப்படுகின்றன. ஏன் பல்ஹர்ஷா ரயில் நிலையத்தில் வைத்து என்ஜின்களை சோதிக்க வேண்டும். நாக்பூரில் செய்யலாமே என்று கேட்கலாம் நீங்கள்.
உண்மையில் இங்கு ரயில்கள் நிற்பதற்கு காரணம் மக்கள் அதிகம் வந்து செல்கிறார்கள் என்பதற்காக அல்ல. ரயில்வே அதிகாரிகள் மொழியில் சொல்வது என்றால், இதுதான் ஷிப்ட் மாற்றும் இடம். 8 மணி நேர ஷிப்ட் இங்கு தான் ஆரம்பம் ஆகிறது. ரயில்வே பணியாளர்களுக்கு பல்லார்ஷா நிறுத்தம் தொழில்நுட்ப நிறுத்தம் ஆகும். அது மட்டும் இல்லாமல் உண்மையில் இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.
நாக்பூர் தான் இந்தியாவின் புவியியல் மையம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எந்த திசையில் இருந்து வந்தாலும் நாக்பூர் மையத்தில் தான் அனைத்து ரயில் நிலையங்களும் இணைகின்றன. நாக்பூர் ஏற்கனவே மிகவும் பிசியான ரயில் நிலையமாக இருக்கிறது, அங்கிருந்து ரயில்களை சுத்தம் செய்வது, தண்ணீர் நிரப்புவது போன்ற வேலைகள் சாத்தியமில்லை.
எனவே இந்திய ரயில்வே தெற்கு நோக்கி செல்லும் ரயில்களை, நாக்பூருக்கு அருகில் உள்ள இருக்கும் பல்ஹர்ஷா ரயில் நிலையத்தை தேர்வு செய்தது. எனவே தான் அனைத்து ரயில்களும் பல்ஹர்ஷா ரயில் நிலையத்தில் நிற்கின்றன. பல்ஹர்ஷாவை அடைந்துவிட்டால் தென்னிந்தியா தொடங்க போகிறது என்றும்(தெலுங்கானா ஆரம்பம்), வட இந்தியா ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றும் சொல்வார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications