டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு.. கூகுள் உள்ளிட்ட ஐடி கம்பெனிகள் திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஏன்? காரணம் இதுதான்

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதார மந்தநிலை அச்சத்தால் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட உலகின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் லே ஆஃப் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இதனால் எச் 1 பி 1 விசாவில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூகுள் உள்ளிட்ட ஐடி கம்பெனிகள் திடீரென பணி நீக்கத்தில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவல், உக்ரைன் - ரஷியா போர், உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு
உள்ளிட்ட பல்வேறு பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எச்சரித்து இருந்தது. பொருளாதார மந்த நிலை எச்சரிக்கைக்கு மத்தியில் பல நாடுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை என்பது நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் பெரிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

"Chatgpt.." கூகுள் இனி காலி? சுட சுட ரிசல்ட்.. 2024 லோக்சபா தேர்தலில் யார் ஜெயிப்பாங்களாம் தெரியுமா?

ஆட்குறைப்பு நடவடிக்கை

ஆட்குறைப்பு நடவடிக்கை

இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தங்களின் செலவினங்களை குறைக்கவும், பொருளாதார இழப்பை சரிசெய்யும் வகையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. உலகின் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக கோலோச்சும் கூகூள், மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்காமல் இல்லை.

 2 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம்

2 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம்

ஊழியர்கள், அதிகாரிகள் எந்த வித முன்னறிவிப்பு இன்றியும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர். அமெரிக்காவில் ஐடி சார்ந்த பணிகளில் மட்டும் சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஏராளமான இந்தியர்கள் அடங்கும். அதாவது 40 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இதனால் எச் 1 பி 1 விசாவில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தள்ளாடும் இந்தியர்கள்

தள்ளாடும் இந்தியர்கள்

ஏனெனில், இந்த விசா இருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை இருந்தால் மட்டுமே தங்கியிருக்க முடியும். இதனால் அங்குள்ள இந்தியர்கள் அடுத்தடுத்த வேலைகளை பெற போராடிக்கொண்டு இருக்கின்றனர். கூகுள் நிறுவனம் மட்டும் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமே இதுவரை ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கொரோனா பொதுமுடக்க காலக்கட்டத்தில் இணையம் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எனவே கூகுள் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பேரை பணியில் அமர்த்தின. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனம் 58 ஆயிரம் ஊழியர்களையும், அமேசான் நிறுவனம் 1 லட்சம் ஊழியர்களையும், கூகுள் நிறுவனம் 21 ஆயிரம் ஊழியர்களையும், மெட்டா நிறுவனம் 13 ஆயிரம் ஊழியர்களையும் பணி அமர்த்தியதாக கூறப்படுகிறது. தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக பெருநிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்க தொடங்கியிருக்கின்றன. அதுபோக சம்பளம் கட் செய்ய இதுபோல நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. எனவே ஆட்குறைப்புக்கு பிறகு கொரோனா காலத்திற்கு முந்தைய நிலைக்கு நிறுவன பணியாளர் எண்ணிக்கை போன பிறகு, பணி நீக்கம் நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

English summary
Due to the fear of economic recession, the world's leading information technology companies including Google and Microsoft are taking lay off action. As a result, Indians staying in the US on H1B1 visas are in dire straits. Here's a look at why IT companies, including Google, are suddenly involved in layoffs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X