"அதிகரிக்கும் வரி+ விலைவாசி.." கடுங்கோபத்தில் மிடில் கிளாஸ்.. மத்திய பட்ஜெட்- மோடி அரசுக்கே ஆபத்து?
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கு பிறகு மத்திய அரசு தங்களை முழுமையாகக் கைவிட்டுவிட்டதாக நடுத்தர வர்க்கத்தினர் புலம்பி வருகின்றனர். மிடில் கிளாஸ் மக்கள் இப்படி உணர என்ன காரணம்.. இந்த பட்ஜெட்டை நடுத்தர வர்க்கத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளாகவே மிடில் கிளாஸ் மக்களுக்குப் பெரிதாக எந்தவொரு திட்டமும் இல்லை. வருமானம் மற்றும் செலவு என இரண்டிற்கும் வரி செலுத்தும் சூழலே நிலவுகிறது.

இந்த பட்ஜெட்டிற்கு பிறகு மிடில் கிளாஸ் மக்களின் வேதனை குரல் அதிகரித்தே இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மத்திய பட்ஜெட்டை பலரும் விமர்சித்தனர்.
மிடில் கிளாஸ் மக்கள்: பல ஆண்டுகளாக பாஜகவை ஆதரிக்கும் போதிலும், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நடுத்தர வர்க்கத்தினர் உணர்கிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "காங்கிரஸ் கட்சியாவது வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதாவது திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், பாஜக அதையும் செய்யவில்லை" என்று சாடியுள்ளார். பொதுமக்களிடம் இருந்து பாஜக எவ்வளவு தூரம் அந்நியமாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாகவும் நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்டங்களை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு நிதியமைச்சர் வேண்டும் என்று மற்றொரு நபரும் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 31% மிடில் கிளாஸ் மக்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை சில ஆண்டுகளில் 61% ஆக உயரும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். பொதுவாகவே மிடில் கிளாஸ் மக்கள் எப்போதும் குறிப்பிட்ட கட்சிக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். இருப்பினும், தற்போதைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் வாக்கு பாஜகவுக்கு மிக முக்கியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மிடில் கிளாஸ்: 2022-23ஆம் ஆண்டில் நமது நாட்டில் 2.24 கோடி இந்தியர்கள் அல்லது 1.6% மக்கள் வருமான வரி செலுத்தி இருக்கிறார்கள். இவர்கள் தான் நமது நாட்டின் முக்கியமான மிடில் கிளாஸ் மக்கள். நமது நாட்டில் கார்ப்ரேட் வரியைக் காட்டிலும் தனிநபர்களுக்கான வருமான வரியே அதிகமாக இருக்கிறது. இதுவே மிடில் கிளாஸ் மக்கள் கொந்தளிக்கக் காரணமாக இருக்கிறது.
பெரும்பாலும் நகர்ப்புறத்தில் வாழும் மிடில் கிளாஸ் மக்கள் இப்போது பாஜகவுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ஆனால், இது கருத்தியல் ரீதியான ஆதரவு இல்லை. பாஜக பிஸ்னஸுக்கு ஆதரவான கட்சி என்பதாலேயே மிடில் கிளாஸ் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும், இந்தியாவின் அந்தஸ்து உலகளவில் வளரும்போது, இந்திய பாஸ்போர்ட் வலிமையானதாக மாறுகிறது. இது நடுத்தர வர்க்க பயணிகளுக்குப் பயனளிக்கிறது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பாஜகவுக்கு எதிராக: கடந்த 2014 மற்றும் 2019களில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் வெல்ல மிடில் கிளாஸ் மக்களின் ஆதரவே முக்கிய காரணம். 2024 லோக்சபா தேர்தலில் மிடில் கிளாஸ் மக்களில் ஒரு பகுதியினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளதாகத் தேர்தலுக்கு பிந்தைய சர்வேக்கள் காட்டுகிறது. இப்போது இந்த 2024 பட்ஜெட்டிற்கு பிறகு, இத்தனை காலம் அமைதியாக இருந்த மிடில் கிளாஸ் மக்கள் வெளிப்படையாகவே தங்கள் சிக்கல்களைப் பேசத் தொடங்கியுள்ளனர்.
காரணம்: இது குறித்து அரசியல் ஆலோசகர் அமிதாப் திவாரி கூறுகையில், "நடுத்தர வர்க்கத்தின் மீது அதிக வரி சுமை இருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கிறார்கள். கடந்த 2019 செப்டம்பரில் கார்பரேட் வரி 30%இல் இருந்து 22% ஆகக் குறைத்தார்கள். கார்ப்பரேட் வரி குறைத்ததால் பெரு நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யும் என அரசு நினைத்தது. ஆனால், தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், அது நடக்கவில்லை. வரி குறைப்பின் நன்மைகள் கார்ப்ரேட்களுக்கே சென்றுவிட்டன" என்றார்.
மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையைப் பின்பற்றுவோருக்கு ரூ. 17,500 வரை விலக்கு அறிவிக்கப்பட்டாலும் கூட நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) மீதான வரிகளை 10%இல் இருந்து 12.5% ஆக உயர்த்தியது மற்றும் இன்டெக்சேஷன் (indexation benefits) பலன்களை நீக்கியது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
அதிகரிக்கும் வரி: அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினரின் வருவாய் அதிகரிக்கவில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பங்குச்சந்தை போன்ற முதலீடுகளைப் பெரியளவில் நம்பி இருந்தனர். இந்தச் சூழலில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களைப் பார்த்தாலே மிடில் கிளாஸ் மக்களின் கொந்தளிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
“இதுக்கு பதில் சொல்லுங்க”.. முதல்வர் ஸ்டாலினுக்கு சப்போர்ட்டாக வரிந்து கட்டி வந்த ப.சிதம்பரம்!
மோடி அரசுக்குச் சிக்கல்: மிடில் கிளாஸ் மக்களின் வாக்கு பாஜகவுக்கு ரொம்பவே முக்கியம். கடந்த சில தேர்தல்களாக மிடில் கிளாஸ் மக்களின் ஆதரவே பாஜகவை வெற்றி பெற வைத்துள்ளது. பாஜக மிடில் கிளாஸ் மக்களுக்கு எதிராகத் திரும்பினால், அவர்கள் வெல்வது கடினம். கடந்த 2004ம் ஆண்டு இதே மிடில் கிளாஸ் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதால் தான் வாஜ்பாய் அரசு வீழ்ந்தது.
இப்போது மோடி அரசுக்கு எதிராக மிடில் கிளாஸ் மக்கள் மத்திய அரசு மீது கோபத்தில் இருப்பது மோடி அரசுக்குக் கண்டிப்பாக நல்ல செய்தி இல்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications