"தள்ளி படுங்க.." சுய இன்பம் கூடவே கூடாது.. புதிதாக கிளம்பும் நோ நட் நவம்பர் சேலஞ்! இளசுகள் பாவம்ப்பா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லாமே டிரெண்டிங் என ஆன இந்த உலகத்தில் இந்த நவம்பர் மாதம் வித்தியமான ஒரு விஷயம் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த டிஜிட்டல் யுகத்தில் எதற்கு எடுத்தாலும் டிரெண்டிங் தான்... எல்லாமே டிரெண்டிங் தான்! உலகில் எதோ ஒரு மூலையில் தொடங்கும் விஷயம் ஒட்டுமொத்தமாக உலகளவில் டிரெண்டாகும்.

சொல்லப்போனால் பல நேரங்களில் டிஜிட்டல் உலகில் ஒரு விஷயம் எப்போது எதற்காக டிரெண்டாகும் என யாராலும் சொல்ல முடியாது. நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதேதான்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

டிரெண்டிங் எல்லாம் வெகுஜன மக்கள் மத்தியில் பரவ தொடங்கிய போது ஐஸ் பக்கெட் சேலஞ் என ஒன்று டிரெண்டானது அனைவருக்கும் ஞாபகத்தில் இருக்கலாம். அரிய வகை கேன்சருக்கு நிதி திரட்டவே இந்த ஐஸ் பக்கெட் சேலஞ் டிரெண்ட் செய்யப்பட்டது. உலக பணக்காரரான பில் கேட்ஸ் தொடங்கி பலரும் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

 நோ ஷேவ் நவம்பர்

நோ ஷேவ் நவம்பர்

ஆனால், காலப்போக்கில் அனைத்தையும் டிரெண்டிங் ஆக்கும் முறை பரவலாக அதிகரிக்கத் தொடங்கியது. அப்படித்தான் நவம்பர் மாதம் என்றாலே ஒரு க்ரூப் கிளம்பிவிடும். அதான் நம்ம நோ ஷேவ் நவம்பர். இப்படி சிகை அலங்காரம் செய்வதை நவம்பர் மாதம் செய்வதைத் தவிர்த்து அதில் வரும் பணத்தைப் பெருங்குடல் கேன்சருக்கு விழிப்பு ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டும் என்பதே நோ ஷேவ் நவம்பரின் நோக்கம்.

 நோ நட் நவம்பர்

நோ நட் நவம்பர்

இதைப் பற்றி எதுவுமே தெரியாமல் நோ ஷேவ் நவம்பரை ஒரு க்ரூப் பின்பற்றும். இப்போது அதில் இருந்து கொஞ்சம் மாறி நோ நட் நவம்பர் என ஒன்றைப் பிடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நோ நட் நவம்பர் பற்றிய பேச்சு இணைய உலகில் எழுந்து உள்ளது. நவம்பர் மாதம் வந்த உடனேயே இந்த நோ நட் நவம்பர் மீம்ஸ்களும் இணையத்தில் அள்ளும். அதென்ன நோ நட் நவம்பர் என்கிறார்களா.. வாங்கப் பார்க்கலாம்.

 என்ன சேலஞ்

என்ன சேலஞ்

2010ஆம் ஆண்டிலேயே இந்த சேலஞ் வந்தாலும் கூட கடந்த சில ஆண்டுகளாகத் தான் இது டிரெண்டாக தொடங்கியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதே இந்த நோ நட் நவம்பரின் ஒரே நோக்கம். அதாவது நவம்பர் மாதம் முழுவதும் பாலியல் உறவுகளைத் தவிர்க்க வேண்டும். எதோ சும்மா கிளம்பிய சேலஞ் என இதை நினைத்துவிடாதீர்கள் இதற்கென தனியாக ரூல்ஸ் எல்லாம் வேறு இருக்கிறதாம்.

 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்

ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்

பொதுவாக சுய இன்பம் செய்வதை ஆங்கிலத்தில் 'நட்டிங்' என்று அழைப்பார்கள். அதன் காரணமாகவே நோ நட் நவம்பர் என இதற்குப் பெயர் வந்தது. எந்த நிலையிலும் பாலியல் உறவைக் கொள்ளக் கூடாது. அதேநேரம் தூங்கும் போது இதுபோன்ற கனவுகள் வந்தால் என்ன செய்யலாம் என நீங்கள் கேட்கலாம். அது பிரச்சினை இல்லையாம். அப்படி எதாவது நடந்தால் அதை விதி மீறலாகக் கருத மாட்டார்களாம். ஆனால், இதைத் தவிர எந்த பாலியல் நடவடிக்கையிலும் உச்சநிலையை அடையக் கூடாதாம்.

 உலா வரும் தகவல்கள்

உலா வரும் தகவல்கள்

வழக்கம் போல இந்த சேலஞ் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சேலஞ் காரணமாக மருத்துவ ரீதியாகப் பயன் தருவதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். அதாவது ஆபாசப் படங்களுக்கு அடிமையாக உள்ளவர்கள் இந்த நோ நட் சேலஞ் மூலம் அதில் இருந்து மீள வழியுள்ளதாகக் கூறுகின்றனர். இருப்பினும், இதற்கான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

 கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

மறுபுறம் இந்த சேலஞ்சால் நெகடிவ் பாதிப்புகளும் பல உள்ளன. உதாரணத்திற்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த சேலஞ்சில் தீவிரமாக உள்ளவர்கள் ஆபாசப் படத் தளங்களுக்குக் கொலை மிரட்டல் கூட விடுத்தனர். அதேபோல இவை செக்ஸை தீண்டதகாத தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதைப் போலச் சித்தரிக்க முயல்வதாகவும் பலர் சாடுகின்றனர்.

 வேண்டாம் டென்ஷன்

வேண்டாம் டென்ஷன்

அதேநேரம் நெட்டிசன்கள் இதுபோல மாதம் ஒரு சேலஞ்சை எடுத்து வராமல் இருக்க மாட்டார்கள். இதை ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, கொலை மிரட்டல் கொடுக்கும் அளவுக்கு சீரியஸாக எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற மருத்துவம் சார்ந்த அட்வைஸ்களுக்கு மருத்துவர்களை அணுகுவதே சரியானதாக இருக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+