Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத்தை அதிர வைத்த பிரியங்கா காந்தி.. டீசர்ட்டில் அது யார் மிண்டா தேவி? 124 நாட் அவுட்டாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சார் மற்றும் வாக்கு திருட்டு புகார் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தின்போது பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் அணிந்திருந்த டீசர்ட் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கிய சமயத்தில் முதலில் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேச எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது குறித்த விவாதம் நடைபெற்றது.

Why Protesting MPs including Priyanka Gandhi Wear Minta Devi T-Shirts Highlight Voter Roll

ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகார்

இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் காங்கிரஸின் ராகுல் காந்தி வாக்கு திருட்டு குறித்த புகாரை முன்வைத்திருந்தார். வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் இந்த வாக்காளர் திருட்டு பிரச்சினை காரணமாகவே எதிர்க்கட்சிகள் பல தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் சாடினார். வாக்காளர் பட்டியலில் இருந்து பல்வேறு போட்டோக்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டார்.

இந்த விவகாரம் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாகவும் பீகார் சார் நடவடிக்கை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குத் தேர்தல் ஆணையம் திடீரெனச் சார் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இது குறித்தும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இன்று காலை நாடாளுமன்றம் கூடிய போது இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இது குறித்து முழக்கமிட்டனர். உடனடியாக இந்த இரு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனச் சொல்லி அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் கேட்டுக் கொண்டும் எம்பிக்கள் தங்கள் இருக்கைக்குத் திரும்பவில்லை. இதையடுத்து லோக்சபா பிற்பகல் 3 மணி வரையும் ராஜ்யசபா மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்தப் போராட்டத்தில் 100+ எம்பிக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் குறிப்பாகக் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அணிந்திருந்த டீசர்ட் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.

டீசர்ட்

சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் மிண்டா தேவி என்ற பெண்ணின் பெயர் மற்றும் போட்டோ இருக்கும் டீசர்ட்டை அணிந்திருந்தனர். மேலும், டீ-சர்ட்டின் பின்புறம் "124 நாட் அவுட்" என்றும் இருந்தது. யார் இந்த மிண்டா தேவி என்ற கேள்வி நமக்கு வரும். ராகுல் காந்தி கடந்த வாரம் வாக்கு திருட்டுக் குற்றச்சாட்டில் இந்த மிண்டா தேவி குறித்துப் பேசியிருந்தார்.

காரணம்

பீகாரைச் சேர்ந்த மிண்டா தேவி பெயர் வரவு வாக்காளர் பட்டியலில் தரௌண்டா சட்டசபைத் தொகுதியில் இடம் பெற்றிருந்தது. அவரது வயது 124 என்றும் வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்போது உலகில் 115 வயதான நபரே உலகில் மிகவும் வயதானவர் என்ற பட்டத்தை வைத்திருக்கிறார். அப்படியிருக்கும் போது அவரை விட 9 வயது மூத்தவராக மிண்டா தேவி பெயர் இருக்கிறது.

மிண்டா தேவி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது பெயரை வைத்து போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் என்றும் காங்கிரஸ் சொல்கிறது. இது போல ஏகப்பட்ட போலி வாக்குகள் செலுத்தப்பட்டிருக்கலாம் என்றும் இதுவே தேர்தல் முடிவுகளை மாற்றியிருப்பதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+