சாண்டா தாத்தா எப்போதும் சிவப்பு நிற ஆடையை அணிவது ஏன்? இதற்கான பதில் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
டெல்லி: இங்கே நம்மில் பலருக்கும் சாண்டா தாத்தா ஏன் தனித்துவமான அந்த சிவப்பு நிறத்தில் மட்டும் ஆடைகளை அணிகிறார் என்ற சந்தேகம் வரும். அதற்கான காரணம் ரொம்பவே சுவாரசியமானது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தான் அனைவருக்கும் நினைவில் வரும். உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற அதிகம் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இந்த இரண்டும் இருக்கிறது.

உலகெங்கும் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரை விடுமுறை தான். எனவே, வெளியூர்களில் வேலை செய்வோரும் கூட இந்த நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பார்கள்.
சாண்டா தாத்தா: மேலும், கிறிஸ்துமஸ் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது சாண்டா கிளாஸ்தான். தொந்தியும் தொப்பையுமாக வலம் வரும் அந்த வயதான சாண்டா தாத்தா, கிறிஸ்துமஸ் சமயத்தில் வந்து பரிசுப் பொருட்களை வைப்பார் என்பதே நம்பிக்கை. சாண்டா தாத்தா கற்பனை கதாபாத்திரம் தான் என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்தாலும், சாண்டா தாத்தா மீதான ஈர்ப்பு யாருக்கும் குறைவதே இல்லை.
"கிறிஸ்மஸ் தாத்தா!" மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ரோஜா தந்த சர்ப்ரைஸ்! அடுத்து நடந்த செம சம்பவம்
கிறிஸ்துமஸ் காலத்தில் வீடுகள், தெருக்கள், கடைகள் அனைத்திலும் சிவப்பு நிறத்தில் சாண்டா கிளாஸ் உருவங்கள் காணப்படுவது வழக்கம். நீங்கள் சாண்டா தாத்தாவை எங்குப் பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். தொப்பையுடன் இருக்கும் உடல், அந்த தனித்துவமான சிவப்பு ஆடை. சாண்டா தாத்தாவுக்கு இந்த தனித்துவமான சிவப்பு ஆடை எப்படி வந்தது.. அதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
சிவப்பு கலர்: சாண்டா கிளாஸ் எப்போதும் சிவப்பு நிறத்திலேயே இருந்தது இல்லை. சாண்டா தாத்தா சிவப்பு நிறத்தில் இருப்பதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறும், வணிக நுட்பமும் உள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம். 1800-களில், சாண்டா கிளாஸ் வெவ்வேறு நிறங்களில், பல்வேறு உருவங்களில் சித்தரிக்கப்பட்டார். பச்சை, சிவப்பு, நீலம், ரெட் என பல்வேறு கலர் சட்டைகளை சாண்டா தாத்தா அணிந்திருந்தார்.
1870-களில், அமெரிக்கக் கலைஞர் தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் சாண்டா தாத்தாவுக்கு முதல்முறையாகச் சிவப்பு உடை, வெள்ளை தாடி, கருப்பு பெல்ட் கொடுத்தார். இதுதான் நாம் இப்போது பார்க்கும் சாண்டா தாத்தாவுக்கு முன்னோடி என சொல்லலாம். இந்த சிவப்பு-வெள்ளை காம்பினேஷன் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் தான் 20ஆம் நூற்றாண்டில், கோகோ கோலா நிறுவனமும் இந்த சிவப்பு நிற சாண்டாவை தங்கள் விளம்பரங்களில் பயன்படுத்தத் தொடங்கியது.
இதுதான் காரணம்: அதற்கான காரணமும் முக்கியமானது. அந்தக் காலகட்டத்தில் கோகோ கோலாவின் விற்பனை வெயில் காலத்தில் உச்சம் தொடும். ஆனால், குளிர் காலத்தில் மிக மோசமாக இருக்கும். அதை மாற்றி கோகோ கோலா விற்பனையை அதிகரிக்கா சாண்டா கிளாஸ் உடன் இணைந்து விளம்பரங்களை வெளியிடத் தொடங்கினர். பிரகாசமான சிவப்பு நிறத்துடன் சாண்டாவின் ஆடை என்பது கோகோ கோலா நிறத்துடன் ஒத்துப்போகவே அது வேற லெவலில் அமைந்தது.
கோகோ கோலா நிறுவனம் தனது விளம்பரங்களில் தொடர்ச்சியாகச் சாண்டா கிளாஸை இதே கெட் அப்பில் வெளியிடவே, இதுவே சாண்டா தாத்தாவின் உடை என்பது அனைவர் மனதிலும் பதிந்தது. இது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் தரும் அடையாளமாகவே மாறிப் போனது. வணிக யுக்தியாகக் கையில் எடுக்கப்பட்ட சாண்டா தாத்தா ஒரு பிரபலமான கலாச்சார சின்னமாக மாறிப் போகவே, அவரது ஆடையும் அப்படியே நிலைத்து நின்றது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications