தனி ஆளாக வென்று கொடுத்த அஸ்வின்.. "அடுத்த போட்டியில் நீக்கப்படுவார்.." சர்ச்சையை கிளப்பிய சசி தரூர்
டெல்லி: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அஸ்வின் அடுத்த போட்டியில் நீக்கப்படுவார் என்று காங்கிரஸின் சசி தரூர் பதிவிட்டுள்ளது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வங்கதேசம் சென்றுள்ள இந்தியா அணி மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய வங்கதேசம் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அதன் பிறகு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் தொடங்கியது.

வங்கதேசம்
இதில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 227 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட்களை எடுத்தார். அடுத்துப் பேட் செய்த இந்தியா 314 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.. அடுத்த இரண்டாவது இன்னிகிஸை தொடங்கிய வங்கதேசம் தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்களை இழந்தது. 70 ரன்களை சேர்க்கும் முன்னே டாப் பேட்ஸ்மேன்களை இழந்தது. இருப்பினும், அதன் பிறகு ஒருவாறு சமாளித்து 231 ரன்களை எடுத்தது. இதில் அஸ்வின் இரண்டு விக்கெட்களை எடுத்திருந்தார்.

இந்தியா வெற்றி
அடுத்து 145 ரன்கள் எடுத்தால் என்று களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 37 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது. டாப் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர். ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில், இந்தியா இருந்தது. அப்போது களமிறங்கிய அஸ்வின் நிதனமாக ஆடி ரன்களை குவித்தார். இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்த அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்களை எடுத்துக் கலக்கினார். 2ஆவது இன்னிங்கிஸில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெயரையும் பெற்றார்.

ஒன் மேன் ஆர்மி அஸ்வின்
இதன் மூலம் 36 வயதான அஸ்வின் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். மிகவும் இக்கட்டான சூழலிலும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக் கோட்டிற்கு அழைத்துச் சென்றார் அஸ்வின்! டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள அஸ்வின் பேட்டிங்கிலும் தன் கில்லி என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். குறிப்பாக இன்றைய தினம் அணி இக்கட்டான நிலையில் இருந்த போதிலும், டென்ஷனாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சசி தரூர்
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுன்டர் ரேங்கிங்கில் இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் அஸ்வினுக்கு பேட்டிங்கில் அமைந்த மிகச் சிறப்பான ஒரு நாள் இன்று. இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டித் தள்ளி வருகின்றனர். அதன்படி திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான சசி தரூரும் அஸ்வினை பாராட்டியுள்ளார். அதேநேரம் பலரைப் போலவே மோசமான டீம் செலக்ஷனுக்காக இந்திய அணியை விமர்சிப்பதையும் அவர் மறக்கவில்லை..

நீக்கப்படுவார்
திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தனது ட்விட்டரில், "வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடுமையாகப் போராடிய இந்தியா வெற்றி பெற்றுள்ளது... நீண்ட காயம் மற்றும் தேர்வுக்குழுவின் புறக்கணிப்பு இருந்தபோதிலும், அதையும் தாண்டி அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஆட்டம் அற்புதமானது. இதனால் எங்கு அவர் அடுத்த போட்டியில் நீக்கப்படுவாரோ என்பதே இப்போது எனக்கு இருக்கும் ஒரே கவலை" என்று ட்வீட் செய்திருந்தார். இந்திய அணியின் டீம் செலக்ஷனை பரவும் விமர்சித்து வரும் நிலையில், சசி தரூர் நக்கலடிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

என்ன காரணம்
ஏனென்றால், வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றதே குல்தீப் யாதவ்தான். மொத்தம் 8 விக்கெட்களை எடுத்த குல்தீப் யாதவ், பேட்டிங்கிலும் 40 ரன்களை எடுத்திருந்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்குத் தான் கொடுக்கப்பட்டது. இருப்பினும், அவரை திடீரென இரண்டாவது டெஸ்டில் இந்தியா நீக்கியது. இந்திய அணியின் இந்த முடிவைப் பல முன்னாள் வீரர்கள் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் அடுத்தாண்டு பிப், மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications