இந்தியில் இன்ஜினியரிங்.. "வேண்டவே வேண்டாம்.." தெறித்து ஓடும் மாணவர்கள்! இந்தி மாநிலத்திலேயே இப்படியா
டெல்லி: இன்ஜினியரிங் பாடங்களை மத்திய அரசு இந்தியில் கொண்டு வந்த போதிலும், அதற்குப் பெரியளவில் ஆர்வம் இல்லையாம். பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தையே தேர்வு செய்கிறார்கள்.
இந்தியாவில் உயர்கல்வி என்பது ஆங்கிலத்திலேயே கற்றுத் தரப்படுகிறது. இருப்பினும், ஆங்கிலத்தை கற்பதைக் காட்டிலும் தாய் மொழியில் கல்வி கற்றால் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்று வல்லுநர்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அரசும் கூட இந்தி மொழியில் தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2022இல், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 13 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இந்தியில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ நடத்த வழங்க அனுமதி வழங்கியது.
இந்தியில் இன்ஜினியரிங்: அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் படிக்க முன்வர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும், விரைவில் மருத்துவ படிப்புகளும் இந்தியில் அறிமுகப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மருத்துவ படிப்புகளும் இந்தி மொழியில் வந்தால் அது கற்றல் திறனை மேலும் மேம்படுத்தும் என ஒரு தரப்பினர் இதை வெகுவாக பாராட்டினர்.
ஆனால், அதற்கு முன்பு இப்போது இந்தியில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். இருப்பினும், இந்தியில் இன்ஜினியரிங் படிக்க அங்கே பெரியளவில் வரவேற்பு இல்லை என்பதை உண்மை. இன்ஜினியரிங் படிப்பை இந்தியில் படிக்கக் குறைந்த அளவு மட்டுமே மாணவர்கள் சேர்கிறார்கள். அவர்களிலும் பலர் பாதியிலேயே டிராப் அவுட் ஆகிவிடுவதாகக் கூறப்படுகிறது.
கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க இந்தி உதவும் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அது அவர்களை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும் என்பது மாணவர்கள் மத்தியில் கேள்வியாகவே இருக்கிறது. இன்ஜினியரிங் படிப்பை இந்தியில் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்பது அவர்களிடம் இருக்கும் முக்கிய கேள்வி. மேலும், ஆங்கிலத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும் இவர்களுக்குமான பாகுபாடும் தொடர்வதாகவே கூறப்படுகிறது.
மோசம்: இதில் மோசமான விஷயம் என்னவென்றால், பாடப்புத்தகங்கள் கூட இன்னும் முழுமையாக இந்தியில் ரெடியாகவில்லையாம். இந்த சூழலில் அவசர கதியில் இந்தியில் இன்ஜினியரிங் ஆரம்பிக்கப்பட்டது சிக்கலாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இந்தியில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த ஒரு மாணவரின் கதை குறித்து நாம் பார்க்கலாம். பவன் என்ற இந்த மாணவர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (MANIT) சேர்ந்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்துள்ளது. அதேநேரம் ஆங்கிலமும் அவருக்கு முற்றிலும் புதியது இல்லை. 11ஆம் வகுப்பில் ஆங்கிலத்தைப் படிக்கத் தொடங்கி பவன், JEE தேர்வைக் கூட ஆங்கிலத்தில் தான் எழுதினாராம். இப்போது இவர் இந்தியில் இன்ஜினியரிங் சேர்ந்துள்ளார். என்ன தான் இந்தியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டுமாம். இது என்ன கொடுமை என்கிறீர்களா.. ஆனால், அதுதான் அங்கே விதியாம்.
பவனுக்கு இந்தி தெரிந்ததால் அவரால் ஏதோ சமாளிக்க முடிகிறது. ஆனால், அவருடன் இந்தியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு இது பெரும் சிரமமாகவே இருக்கிறதாம். அவர்களின் பேராசிரியர் முதலில் ஆங்கிலத்தில் சப்ஜெக்ட்டை விளக்கினாலும் அதன் பிறகு இந்தியிலும் விளக்குகிறார். இருப்பினும், பாடப் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு பிரச்சினைகளும் இருப்பதால் அதை அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லையாம்.
ரொம்ப சிரமம்: இதனால் யூடியூப் மூலமாகவே அவர்கள் பாடங்களைப் படிக்கிறார்கள். யூடியூபில் ஆங்கிலத்தில் பாடங்களைக் கேட்டு, அதைக் கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் இந்தியில் மொழி பெயர்த்துப் புரிந்து கொள்கிறார்கள். தேர்வு ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்பதால் பிறகு மீண்டும் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கற்றுக்கொள்கிறார்களாம். இந்தியில் படிப்பது இந்தளவுக்குச் சிரமமாகவே இருக்கிறதாம். வேலை கிடைப்பதெல்லாம் அடுத்தது முதலில் அனைத்து தேர்வுகளில் பாஸ் ஆவதே சிரமமாக உள்ளது என்கிறார்கள் பவனின் நண்பர்கள்.
பவனுக்கும் கூட இந்தி மொழியில் இன்ஜினியரிங் சேர்ந்தது இப்போது பயமாகவே இருக்கிறதாம். எங்கு தனக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்காதோ என அவர் அஞ்சுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது தந்தை மர வேலை செய்பவர்தான். 30 லட்சம் லோன் எடுத்தே எங்களைப் படிக்க வைத்தார். எனது மூத்த சகோதரர் என்ஐடி ரூர்கேலாவில் இன்ஜினியரிங் முடித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
ஜேஇஇக்கு தயாராகும் போது நான் 12 மணி நேரம் படித்தேன், ஆனால் என் சகோதரர் 15 மணி நேரம் படித்தார். கூடுதல் நேரத்தை அவர் ஆங்கிலம் கற்க ஒதுக்கினார். நானும் அதைச் செய்திருக்கலாம். இப்போது இந்தியில் இன்ஜினியரிங் சேர்ந்துள்ளேன். ஆனாலும் எனக்கு நல்ல வேலை கிடைக்குமா என அச்சம் இருக்கிறது" என்றார்.

அச்சம்: இவருக்கு மட்டுமில்லை. பல மாணவர்களுக்கு இதைக் கவலை இருந்துள்ளது. இதனால் இந்தியில் சேர்ந்தாலும் பல மாணவர்கள் ஆங்கிலத்திற்கு மாறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 334 மாணவர்கள் முதலில் இந்தியில் சேர்ந்தாலும் கூட இப்போது 27 மாணவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கிறார்கள். மற்ற அனைவரும் ஆங்கில பிரிவுக்கு மாறிவிட்டார்கள். இப்படிதான் அங்கே நிலைமை இருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் சரளமாக ஆங்கிலம் தெரிந்த மாணவர்களுக்கு மட்டுமே வேலை தர முன்வருகிறது. இதைச் சமாளிக்க விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் இந்தி தெரிந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கல்லூரி சார்பிலும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அதேநேரம் சில பேராசிரியர்கள் இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாகக் கருத முடியாது என்கிறார்கள். இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் இந்தியில் படித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்பது அவர்கள் வாதம்.
இரு தரப்பு வாதம் எப்படி இருந்தாலும் கடைசியில் மாட்டிக் கொண்டு முழிப்பது என்னவோ மாணவர்கள் தான். இதன் காரணமாகவே பல மாணவர்கள் இந்தி எடுத்தாலும் ஓராண்டிற்குள் ஆங்கில மொழிக்கு மாறிவிடுகிறார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications