சந்திரயான் 3க்கு சிக்கல்? உள்ளே வந்த ரஷ்யா! அதே நாளில் அதே இடத்தில்.. என்ன நடக்கும்! பரபர விளக்கம்
டெல்லி: சந்திரயான் 3 சாட்டிலைட்டும் ரஷ்யா அனுப்பிய லூனா 25 சாட்டிலைட்டும் ஒரே நாளில் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், இதனால் ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரஷ்யா இதற்கு முன்பு சோவியத் ஒன்றியமாக இருந்த சமயத்தில் தொடர்ச்சியாக விண்வெளி குறித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டது. அமெரிக்காவுக்கு கடும் போட்டி தரும் விதமாக விண்வெளிக்குப் பல ராக்கெட்களை அனுப்பினர்.

விண்வெளி குறித்த ஆய்வில் சோவியத் ஒன்றியம் டாப்பில் இருந்தது. இருப்பினும், சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு ரஷ்யாவில் விண்வெளி ஆய்வில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
ரஷ்யா: குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் முன்னணியில் இருந்த சோவியத் ஒன்றியம், கடந்த 47 ஆண்டுகளாக நிலவுக்கு எந்தவொரு ராக்கெட்டையும் அனுப்பாமல் இருந்தது. இதற்கிடையே 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இப்போது தான் அவர்கள் மீண்டும் குறித்து ஆய்வு செய்ய ராக்கெட் ஒன்றை அனுப்பியுள்ளனர். லூனா-25 என்ற இந்த சாட்டிலைட் நேற்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது.
இங்கு அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் லூனா-25 சாட்டிலைட் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். நிலவைச் சுற்றி வரும் லூனார் 25 சாட்டிலைட் சில நாட்களில் சந்திரனின் தெற்கு பகுதியில் தரையிறங்கும். எல்லாம் சரியாக நடந்தால் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் ராக்கெட் என்ற சிறப்பை இது அடையும்.
சந்திரயான் 3: இஸ்ரோவின் சந்திரயான் 3 ராக்கெட்டும் இதே தென் துருவத்தில் தான் தரையிறங்குகிறது. சந்திரயான் 3 தான் முதலில் அங்குத் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை லூனா 25 ஓவர்டேக் செய்கிறது. இரண்டுமே இப்படி தென் துருவத்தில் தரையிறங்கும் நிலையில், இந்த லூனா 25 ராக்கெட்டால் சந்திரயான்-3க்கு ஆபத்திற்கு ஏற்படும் என இணையத்தில் தகவல் பரவியது. ஆனால், இதை ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
லூனா-25 நிலவில் தரையிறங்குவது சந்திரயான் -3க்கு இடையூறாக இருக்காது என்று ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. இரண்டுமே தென் துருவத்தில் தரையிறங்குகிறது என்றாலும் இரண்டிற்கும் இடையே போதிய தூரம் இருப்பதாகவும் இதனால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என்றும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. லூனா 25 வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளது... அதே நாளில் தான் சந்திரயான்-3 லேண்டரும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளக்கம்: இது தொடர்பாக ரஷ்ய விண்வெளி ஏஜென்சி கூறுகையில், "லூனா-25 மற்றும் சந்திரயான்-3 சாட்டிலைட்கள் வெவ்வேறு இடங்களில் தரையிறங்க உள்ளன. இரண்டும் மோதிக்கொள்ளவோ அல்லது இடையூறு ஏற்படவோ ஆபத்து எதுவும் இல்லை.. நிலவில் அனைவருக்கும் போதுமான இடம் உள்ளது. லூனா-25 நிலவில் தரையிறங்கிய பிறகு ஒரே இடத்தில் இருக்கும். அதனால் நகர முடியாது.

இங்கிருந்து அது நிலவுக்குச் சென்றடைய 5 நாட்கள் ஆகும். இரண்டு நாட்கள் அது நிலவைச் சுற்றி வந்து அதன் பிறகே தரையிறங்கும்.. தற்போது வரை நிலவில் தரையிறங்க நாங்கள் 3 இடங்களைத் தேர்வு செய்து வைத்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
எப்போது: சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு அருகில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.47 மணிக்குத் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது நிலவைச் சுற்றிலும் மொத்தம் 6 ஆர்பிட்டார்கள் வட்டமடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் கொரியாவின் ஆர்பிட்டார்கள் மற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டார் என மொத்தம் 6 உள்ளன. அதேபோல நிலவில் இப்போது ஒரே ஒரு ரோவர் மட்டுமே ஆக்டிவாக உள்ளது. அதுவும் சந்திரயான் 3 தரையிறங்கும் இடத்தில் இருந்து தொலை தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications