2070ம் ஆண்டுக்குள் வாகன புகை இல்லாத நாடாக இந்தியா மாற்றப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: வாகன புகை இல்லாத நாடாக 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உருவாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்து இருக்கிறார். மத்திய மாநில அரசுகள் பயன்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்குயது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் இதுவாகும். எனவே இயல்பாகவே மற்ற பட்ஜெட்டுகளை காட்டிலும் இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் 2023 - 2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பயன்கள் குறித்து முதலில் பேசிய அவர், புதிய திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்படும் நிதியை அறிவித்து வருகிறார்.

அவையில் சிரிப்பலை
இதில் புகை மாசு, வாகனங்கள் குறித்து உரையாற்றிய அவர், பழைய வாகனங்களை மாற்றுவது பற்றி தெரிவித்தார். "வாகனங்களை மாற்றுவது என்பது நாட்டின் முக்கியமான கொள்கை. அதாவது, பழைய அரசியலை மாற்றுவது.." என்று அவர் சொன்னவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.
உடனே நிர்மலா சீதாராமனும் சிரித்துக் கொண்டே, "எனக்கு தெரியும். நன்றி.

பழைய வாகனங்கள்
பழைய மாசை ஏற்படுத்தும் வாகனங்களை மாற்றுவது. இதுவும் சரியாக இருக்கும் அல்லவா. அதிக மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை மாற்றுவது நாட்டின் பொருளாராத்தை எடுத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அரசின் பழைய வாகனங்களை அழிப்பதற்கு கடந்த 2021 -22 பட்ஜெட்டில் தேவையான நிதியை ஒதுக்கினோம்.

சிரித்தது ஏன்?
பழைய வாகனங்கள் மற்றும் பழைய ஆம்புலன்ஸுகளை மாற்றுவதில் மாநில அரசுகளும் பங்காற்றின. வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் வாகன புகை இல்லாத நாடாக இந்தியா உருவாகும்." என்றார். நிதியமைச்சர் பழைய அரசியல் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டது காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடும் வகையில் இருந்ததாக பலரால் புரிந்துகொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே அவையில் சிரிப்பலை ஏற்பட்டதாக பார்க்கப்படுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications