இந்தியாவில் ஓநாய் - நாய் இணைந்து உருவான கலப்பின விலங்கு.. பெரும் ஆபத்து? என்ன நடக்கும்? திடுக் தகவல்
டெல்லி: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓநாய் மற்றும் நாய் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான விலங்குகள் காணப்படுகின்றனவாம். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் புனே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இந்த விசித்திர விலங்குள் நடமாடுகின்றன.
பார்ப்பதற்கு ஓநாயை போலவே இருந்தாலும் ஆராய்ச்சியில் இது ஒரு கலப்பின விலங்காக உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே பெரும் ஆபத்து நேரலாம் என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள்.. இது பற்றி இங்கே பார்க்கலாம்.

செல்லப்பிராணிகள்: வீடுகளில் செல்லப்பிராணிகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் நாய்க்கு எப்போதும் தனி இடம் உண்டு. வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நாய்கள் வளர்கின்றன. நாய்கள் மனிதர்களை சார்ந்தே பெரும்பாலும் வாழ்கின்றன. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக சொல்லப்படுவதுண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் வீட்டைக் காவல் காக்கின்றன.
நாய்கள் - ஓநாய்கள் ஆகியவை ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்ற கூற்றும் உள்ளது. நாயை விட உருவத்தில் பெரிதாகவும் காட்டு விலங்காகவும் உள்ள இந்த ஓநாய்கள் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய விலங்காகவும் பார்க்கப்படுகிறது. ஓநாய்களைப் பழங்காலத்து மனிதர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என்ற வாதமும் உள்ளது.
ஓநாய்கள்: ஓநாய்களை பொறுத்தவரை வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் ஓநாய்கள் காணப்படுகிண்றன. சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம். மகாராஷ்டிராவில் உள்ள சில வனப்பகுதிகளில் ஓநாய்களில் சற்று வித்தியாசமான விலங்கு தென்பட்டது. இது வழக்கமான ஓநாயை போலவும் இல்லை.
வித்தியாசமான விலங்கு: நாய்களை போலவும் இல்லை என வியந்த வன உயிரியல் ஆர்வலர்கள், வினோதமான இந்த விலங்கின் முடி மற்றும் மலத்தை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அதில், இந்த வினோத விலங்கு நாய் மற்றும் ஓநாய் ஆகியவற்றின் கலப்பினத்திலிருந்து உருவான ஒரு கலப்பின விலங்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..
இந்த விலங்கு ஓநாய்-நாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பு பற்றி சர்வதேச அளவில் ஆய்வுகள் நடக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் இத்தகைய ஆதாரங்கள் முதல் முறையாக இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த ஓநாய்-நாய் கலப்பின விலங்கால் என்ன மாதிரியான ஆபத்து என நினைக்கலாம்.
என்ன ஆபத்து?: இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே ஆபத்து வரலாம் என்பதுதான் வன ஆர்வலர்களின் கருத்து. அதாவது, இந்த கலப்பின விலங்கு தனது இனத்தை பெருக்கும். வனப்பகுதிகளில் இந்த கலப்பினங்கள் உருவாவது மிகவும் ஆபத்து என்கிறார்கள். ஏனெனில், ஓநாய் இனத்திற்கு பெரும் ஆபத்து என்பதோடு அவற்றின் தனித்துவம் மரபணு அடையாளம் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஓநாய்களை பாதுகாக்க: ஏனெனில் அதிக எண்ணிக்கையில் உள்ள நாய்கள், குறைவான எண்ணிக்கையில் உள்ள ஓநாய்களுடன் கலப்பினம் செய்தால் ஓநாய்களின் மரபணு பண்புகள் அழிந்து போகும். இது காலப்போக்கில் ஓநாய் இனமே அழிந்து போகும். இதனால் ஓநாய் இனங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வன உயிரிய ஆர்வலர்கள், அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக உள்ள புலிகளை பாதுகாப்பது போல ஓநாய்களை பாதுக்க முடியாது எனவும் ஏனெனில் ஓநாய்களுக்கு தனியாக சரணாலயங்களை உருவாக்குவது கடினம்.
ஏன் முக்கியம்: ஏனென்றால், ஓநாய்கள் மாறுபட்ட நிலப்பகுதியில் வாழும் விலங்கு. இவை வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடுகின்றன. எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஓநாய்களை பாதுகாப்பது பற்றிய நடவடிக்கையை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள் .
"இந்திய புல்வெளிக்காடுகள் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் கொண்ட பகுதியாக உள்ளன. பல விலங்குகள் இந்த காடுகளில் வாழ்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்பில் ஓநாய்கள் உணவுச் சங்கிலியின் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. எனவே ஓநாய்களை பாதுகாப்பது முக்கியம் என்பதே வன ஆர்வர்லளின் வாதம்.
ஓநாய் இனத்திற்கே ஆபத்து?: நாய்க்கும் ஓநாய்க்கும் மரபணு வித்தியாசங்கள் உள்ளன. மனிதர்களால் வளர்க்கப்படுவதால், நாய்களுக்கு ஓநாய் போன்ற குணங்கள் எதுவும் கிடையாது. நாய்கள் அளவு சிறியதாகி, அவற்றின் வலிமை குறைந்துவிட்டன. தற்போது ஓநாய் - நாய் கலப்பினம் ஏற்பட்டால், நாய்களின் குணங்கள் ஓநாய்களுக்குள் செல்லலாம்.
இது ஓநாய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லை. நாய்கள் மூலமாக ஓநாய்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட வைரஸ்கள் பரவலாம். இந்த வைரஸ் ஓநாய்களுக்கு பரவும் போது அனைத்து காட்டு ஓநாய்களும் உயிரிழக்க கூடிய நிலை வரலாம் என்ற ஒரு திடுக் தகவலும் வன ஆர்வலர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications