முதியோர் இல்லத்திற்கு செல்லாததால் ஆத்திரம்! மாமியாரின் தலைமுடியை தரதரவென இழுத்து தள்ளிய மருமகள்!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலை அடுத்த குவாலியரில் குடும்பத் தகராறில் மாமியாரின் தலைமுடியை இழுத்து கடுமையாக மருமகள் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் முதியோர் இல்லத்திற்கு செல்ல மறுத்ததற்காகவும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
குவாலியரை சேர்ந்தவர் விஷால் பத்ரா. இவர் காருக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நீலிகா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்களுடன் சரளா பத்ரா (70). இவர் தங்களுடன் இருப்பது நீலிகாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும்படி கணவர் விஷாலிடம் நீலிகா நச்சரித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் விஷால், மனைவியின் சொல்லை கேட்கவில்லை. தனது தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்க மாட்டேன் என மனைவியிடம் சொல்லிவிட்டார்.
இதனால் கோபமடைந்த நீலிகா, தனது தந்தை சுரேந்திர கோலி, சகோதரர் நானக் கோலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் சில அடியாட்களுடன் விஷாலின் வீட்டுக்குச் சென்றனர்.
அவர்களை தடுத்த விஷால் பத்ரா தடுத்தார். அப்போது மருமகன் என்றும் பாராமல் சுரேந்திர கோலி தாக்கினார். பதிலுக்கு விஷால் அடிக்க முயன்றபோது நானக் மற்றும் அவருடன் வந்தவர்கள் விஷாலை சரமாரியாக அடித்தனர். அப்போது தடுக்க முயற்சித்த சரளாவுக்கும் சரமாரியாக அடி கிடைத்தது.
இதையடுத்து மாடியிலிருந்து வந்த நீலிகா, மாமியார் சரளாவின் தலைமுடியை பிடித்து தரதரவென தெருவுக்கு இழுத்துச் சென்றதோடு, கைகளால் சரமாரியாக அடித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விஷாலையும் சரளாவையும் காப்பாற்றினர்.
உடனே போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து விஷால் போலீஸாரிடம் கூறுகையில், எனக்கு பல கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறது. அதை மனைவி குடும்பத்தினர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். என் மீது பொய் புகார் கொடுக்கப் போவதாக நீலிகா மிரட்டி வந்தார். என் தாயை வெளியே துரத்துவதாகவும் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் மீரட்டில் மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்முக்குள் வைத்தது போல் எனக்கும் ஆகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. இவ்வாறு விஷால் கண்ணீர் விட்டார். இது குறித்து போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications