Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் 12 கி.மீ தரதரவென கார் இழுத்துச்சென்றதில் இளம்பெண் பலி.. நடந்தது என்ன? ஷாக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் ஸ்கூட்டியில் சென்ற இளம் பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் கார் சென்றதாகவும் காருக்கு அடியில் சிக்கிய இளம்பெண் 12 கி.மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும் வகையில் அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில்தான், புத்தாண்டு தினத்தன்று அதிகாலை டெல்லியில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து என முதலில் தெரிவிக்கப்பட்டாலும் பாலியல் தாக்குதல் நடைபெற்று இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளனர். டெல்லியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தர தரவென இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்

தர தரவென இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்

தலைநகர் டெல்லியில் கன்ஜாவ்லா - சுல்தான்புரி பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 20 வயது இளம் பெண் தனது ஸ்கூட்டி பைக்கில் தனியாக வந்துள்ளார். அப்போது 5 பேருடன் வந்து கொண்டிருந்த மாருதி சுசுகி பெலேனா கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியதாக கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற போது கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதில் காருக்கு அடியில் சிக்கிய இளம்பெண் 12 கி. மீட்டர் தர தரவென இழுத்துச்செல்லப்பட்டு பரிதாபமான முறையில் உயிரிழந்து உள்ளார்.

சடலத்தை மீட்ட பிறகே தெரிந்தது

சடலத்தை மீட்ட பிறகே தெரிந்தது

பெண் ஒருவரின் சடலம் கிடக்கும் தகவல் கிடைத்த பிறகே உடலை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்லனர். அதன்படிப்படையில் பெண்ணை சாலையில் தரதரவென இழுத்துச்சென்ற காரில் பயணித்த தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்துன், மனோஜ் மிட்டல் என 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தனக்கு கடும் வேதனை அளிப்பதாகவும் வெட்கி தலைகுனிவதாகவும் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தாய் குற்றச்சாட்டு

தாய் குற்றச்சாட்டு

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் யாரும் இதை வைத்து சந்தர்ப்பவாத பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்வதாகவும் தனது ட்விட் பதிவில் சக்சேனா தெரிவித்துள்ளார். இதற்கிடையே உயிரிழந்த பெண்ணின் தாயாரான ரேகா, தனது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எங்களுக்கு நீதி வேண்டும்

எங்களுக்கு நீதி வேண்டும்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனது மகளின் உடைகள் முற்றிலும் கிழிந்து இருந்தன. நாங்கள் உடலை பார்க்கும் போது நிர்வாணமாகவே இருந்தது. எனவே இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும்" என்றார். டெல்லி போலீஸ் அதிகாரிகள் இந்த சம்பவம் பற்றி கூறும் போது, ஸ்கூட்டி மீது கார் மோதியது தங்களுக்கு தெரியும். ஆனால், பல கிலோமீட்டருக்கு காரோடு பெண் இழுத்து வரப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என காரில் இருந்தவர்கள் கூறினர். எனினும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

பாலியல் வன்கொடுமை இல்லை?

பாலியல் வன்கொடுமை இல்லை?

மேலும் சில சமூக ஊடகங்களில் இது பாலியல் வன்கொடுமை என செய்தி வெளியாகிறது. அது உண்மையல்ல. இதுபோன்ற பதிவுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், காரில் இருந்த நபர்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் ஆபத்தானது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களுக்காக டெல்லி போலீசாருக்கு நான் சம்மன் விடுத்துள்ளேன். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த உண்மையும் வெளிவரும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+