‛‛கொல்ல முயற்சி’’.. சமாஜ்வாதி எம்பியின் காலரை பிடித்து இழுத்த சோனியா! பகீர் கிளப்பிய பாஜக எம்பி
டெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும் என சோனியா காந்தி கூறினார். இந்நிலையில் நாடாளுமன்ற லோக்சபாவில் சமாஜ்வாதி எம்பியின் காலரை பிடித்து சோனியா காந்தி இழுத்த சம்பவம் குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் நீண்ட நாட்களாக சட்டசபை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து நேற்று லோக்சபாவில் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தார்.
இன்று விவாதம் நடந்து வருகிறது. இன்றைய விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெண் எம்பிக்கள் பேசினார். திமுக சார்பில் கனிமொழி எம்பி பேசினார். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பேசினார். இந்த விவாதத்தின்போது சோனியா காந்தி கூறியதாவது:
‛சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணமாகும். உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் எனது கணவர் ராஜிவ் காந்தி. அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் அவரது கனவு ஓரளவு நனவாகி உள்ளது.
மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. தற்போது 13 ஆண்டு பெண்கள் காத்திருக்கின்றன. தற்போது சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் நிறைவேறினால்தான் அவரது கனவு முழுமையாக நனவாகும். இதனால் இந்த மசோதாவை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மாறாக ஒன்று, மூன்று, 5 , 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? மேலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என்றார்.
இந்நிலையில் தான் சோனியா காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பி நிசிகாந்த துபே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக சோனியா காந்தி கூறிய நிலையில் அதற்கு நிஷிகாந்து துபே விமர்சனம் செய்தார். ‛‛இந்த மசோதாவை கொண்டு வர மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை தேவை என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த மசோதா நிறைவேற்ற காலம் எடுக்கும். இந்த வேளையில் நான் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். சோனியா காந்தி அரசியல் செய்ய விரும்புகிறார் என நினைக்கிறேன்.
ஏனென்றால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர சுஸ்மா சுவராஜ், கீதா முகர்ஜியின் பெயரை அவர் கூறவில்லை. ஆனால் மொத்த கிரெடிட்டையும் சோனியா காந்தியை எடுத்து கொள்கிறார். மேலும் நாடாளுமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் வி நாராயணசாமி எஸ்டி, எஸ்டிக்களுக்கு அரசு பணிகளில் பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு குறித்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது சமாஜ்வாதி கட்சியின் யஷ்வீர் சிங் அந்த மசோதாவை பிடுங்கி கிழித்தார்.
இதையடுத்து சோனியா காந்தி தான் முதலில் வந்து அவரது காலரை பிடித்தார். அப்போது நான் அவரிடம் நீங்கள் சர்வாதிகாரி அல்ல. ராணியும் அல்ல என்றேன். அதோடு வன்முறையில் ஈடுபட முடியாது என்றேன். பாஜக இல்லாமல் இருந்திருந்தால் சமாஜ்வாதி கட்சியின் எம்பிக்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என முலாயம் சிங் யாதவ் கூறினீர்கள். நீங்கள் எம்பிக்களை கொல்ல முயற்சி செய்தீர்கள்'' என பேசியுள்ளார்.
அதாவது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாக கூறி, அதனை தாமதம் செய்வதாக மத்திய பாஜக அரசை சோனியா காந்தி விமர்சித்த நிலையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே 2012ல் நடந்த சம்பவத்தை கிளறி விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications