மிக மோசமான நிலையில் பிரேசில்,அமெரிக்கா.. 'இது' மட்டுமே ஒரே வழி.. உலக நாடுகள் எடுத்த அதிரடி முடிவு
டெல்லி: அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 3,74,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.04 கோடியை கடந்துள்ளது. உலகெங்கும் தற்போது 2,07,48,366 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க நாடான பிரேசிலில் கொரோனா பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,120 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 1,111 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 1,14,83,370 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2,78,327 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகபட்சமாக 41,593 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் 631 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 3,00,92,550 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 5,47,228 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இந்த இரண்டு நாடுகளில் மட்டும் தினசரி கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல பிரான்ஸ், இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசியே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுளளன. இதற்காக பைசர், மாடர்னா, ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசிகளின் அவரசகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications