அமைச்சர் உதயகுமார் இமேஜை டேமேஜ் செய்த முதல்வர்... அமைச்சர்களின் கருத்து அரசு கருத்தல்லவோ?
தருமபுரி: தமிழகத்தின் 2-வது தலைநகரம் தொடர்பாக அமைச்சர்கள் கூறுவது அவரவர் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அரசு கருத்து கிடையாது எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இதன்மூலம் இரண்டாவது தலைநகரம் விவகாரத்தை கிளப்பிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இமேஜே டேமேஜ் செய்துள்ளார்.
முதல்வர் பேச்சில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியது யாதெனில், அமைச்சர்களின் கருத்தும் அரசின் கருத்தும் ஒன்றல்ல என்பது தான்.

மதுரை அரசியல்
கடந்த வாரம் முழுவதும் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பெரும் பஞ்சாயத்து நடைபெற்றது. அதற்கு அடித்தளமே மதுரை தான், அமைச்சர் செல்லூர் ராஜூ முதல்வர் வேட்பாளர் பற்றி தனது பேட்டியில் ஒரு கருத்தை கூற அதற்கு மாறுபட்ட வகையில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் மற்றொரு கருத்தைக் கூற அது பூதாகரமாகியது. கூட்டறிக்கை மூலம் ஒரு வழியாக அந்த பிரச்சனை தற்காலிக முடிவுக்கு வந்தது.

அமைச்சர் உதயகுமார்
அதிமுகவில் எழுந்த பரபரப்பு ஓய்ந்த 2 நாட்களுக்குள் அடுத்த பரபரப்பை உருவாக்கினார் அமைச்சர் உதயகுமார். மதுரை மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை 2-வது தலைநகராக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினார். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தொழில் வர்த்தக சபையினரை வரவழைத்து கலந்தாய்வு கூட்டத்தை கூட தனது தலைமையில் நடத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம்
அமைச்சர் உதயகுமார் கோரிக்கைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருப்பது வேறு யாருமல்ல. இதே அதிமுக அரசில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவருமான வெல்லமண்டி நடராஜன் தான். எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டங்களில் ஒன்று திருச்சியை 2-வது தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது எனக் கூறியுள்ள அவர் திருச்சியை தான் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என போர்க்குரல் கொடுத்து வருகிறார்.

தர்மசங்கடம்
திருச்சி மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் திருச்சியை 2-வது தலைநகராக்க பல தரப்பினரும் ஆதரவும், குரலும் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக கருதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2-வது தலைநகரம் விவகாரத்தில் அமைச்சர்களின் கருத்து அரசு கருத்தல்ல என்றும் அவரவர் கருத்தாக இருக்கலாம் என்றும் தருமபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

கேள்விக்குறி
அமைச்சர் ஒருவரின் கருத்து அரசின் கருத்தல்ல அவரது தனிப்பட்ட கருத்து என முதல்வர் கூறியிருப்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும். இதன் மூலம் அமைச்சர்கள் மீதும் அவர்கள் அளிக்கும் உறுதிகள் மீதும் மக்கள் வைக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாக கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications