தர்மபுரி அருகே அதிர்ச்சி.. பெற்ற மகளிடமே.. தந்தை செய்த கேவலமான காரியம்.. போக்சோவில் கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி தொன்னையன் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் (37), லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வருமாம்.

father sexually abused his daughter near Karimangalam in Dharmapuri

அப்போதெல்லாம் இரு மகள்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு, தனலட்சுமி மட்டும் காவேரிப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தனலட்சுமி சென்றுவிடுவாராம். கோபம் தணிந்தவுடன் மீண்டும் திரும்புவார். இதே போல், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்ட தனலட்சுமி, தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

சமீபத்தில் வீடு திரும்பிய அவர். 10 வயதான 2வது மகளை, கணவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சண்முகத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+