சாப்பிட்டதற்குப் பணம் கேட்டது குத்தமா?.. ஹோட்டல்காரரை ஷூவை கழற்றி தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்டபோது ஆத்திரமடைந்த உதவி சிறப்பு காவல் ஆய்வாளர் கடையின் உரிமையாளரை ஷூவை கழற்றி தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹோட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற எஸ்எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. சுற்று வட்டாரப் பகுதி மக்களும் இங்கு வந்துதான் சிகிச்சை பெற்றுச் செல்வது வழக்கம். இப்பகுதியில் புறக்காவல் நிலையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் உள்ள போலீஸார் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர்.

police


தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலை வீரமணி என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி தினமும் சாப்பிடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் உணவுக்கு கையில் உள்ள பணத்தைக் கொடுத்துவிட்டு பின்னர் தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.

இதேபோல, நேற்றும் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த காவேரி சாப்பிட்ட உணவிற்கான பணத்தைக் கொடுக்காமல் பின்னர் தருவதாகக் கூறியுள்ளார். மாலையிலும் உணவு சாப்பிட்டுவிட்டு சென்றபோது வீரமணியின் மகன் முத்தமிழ் ஏற்கனவே நேற்று சாப்பிட்ட உணவுக்கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ. காவேரி, கடை உரிமையாளரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் பணத்தை தூக்கி வீசியெறிந்த எஸ்.எஸ்.ஐ. காவேரி, கொலை செய்துவிடுவதாக முத்தமிழை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் தான் அணிந்திருந்த ஷூவை காலில் இருந்து கழற்றி முத்தமிழை, காவேரி அடிக்க முற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


இதையடுத்து, கடையில் இருந்தவர்கள் அவரைத் தடுத்ததையடுத்து காவேரி அங்கிருந்து சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சோஷில் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காவேரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.


சமூக வலைதளங்களில் இந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சாப்பிடுவதற்குத் தானே உரிமையாளர் பணம் கேட்கிறார். காவல் துறையினரே இப்படி நடந்து கொண்டால் பொதுமக்கள் எப்படி பிழைப்பது, 20 ரூபாய்க்காக தாக்குதலில் ஈடுபடுவதா போன்ற கமெண்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+