முஸ்லிம்களின் ஓட்டுக்கு குறி.. ஹிந்தியில் பேசிய சவுமியா அன்புமணி.. திரும்பி பார்க்க வைத்த தர்மபுரி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரியில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இஸ்லாமியர்களின் ஓட்டுகளை குறிவைத்து ஹிந்தியில் பேசி ஓட்டு சேகரித்து அனைவரையும் கவர்ந்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் ஜுன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி உள்ளது.

PMK candidate Sowmiya Anbumani campaign in Dharmapuri she speaks Hindi in muslim area


திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக உள்ளது. பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகளை பாஜக வழங்கி உள்ளது.

இதில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக மனைவி சவுமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்குவதால் சவுமியா அன்புமணி தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார். அதுதவிர பாமகவினர், சவுமியா அன்புமணியின் 2 மகள்களும் தர்மபுரியில் தங்கி அம்மாவு்ககாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

‛‛என் கண்முன் தெரியுது’’.. தர்மபுரியில் வெல்வாரா சவுமியா அன்புமணி? குறிசொன்ன சாமியாடி.. அரண்ட பாமக


இந்நிலையில் தான் சவுமியா அன்புமணி தர்மபுரியில் பள்ளிவாசல் தெருவில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அவருடன் ஜிகே மணி எம்எல்ஏ இருந்தார். இந்த தெருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நிலையில் சவுமியா அன்புமணி ஹிந்தியில் பேசி ஓட்டு கேட்டார். ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மாதிரியை கையில் எடுத்து அதில் இருக்கும் மாம்பழ சின்னத்தை சுட்டிக்காட்டி தனக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

அப்போது சவுமியா அன்புமணி, ‛‛நம்ம பசங்களுக்கு நல்ல வேலை இல்லை. இளம்பெண்கள், இளைஞர்கள் நன்றாக படிக்கிறார்கள். ஆனால் ஒரு தொழிற்சாலை கூட தர்மபுரியில் இல்லை. தர்மபுரி என்ற மாவட்டம் தமிழ்நாடு மேப்பில் இல்லாதது போல் தான் இதுவரை அனைவரும் நடந்து கொண்டுள்ளனர். பாமக திட்டம் என்பது அனைத்து மக்களின் வளர்ச்சிக்கானது. இவர்களுக்கு மட்டும் தான். அவர்களுக்கு மட்டும்தான் என்ற பாகுபாடு கிடையவே கிடையாது. பெண்கள், சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்பட அனைவருக்குமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார்.

பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?


தர்மபுரியை பொறுத்தமட்டில் மொத்தம் 4 முனை போட்டி உள்ளது. திமுக சார்பில் மணி, அதிமுக சார்பில் அசோகன், பாஜக கூட்டணியின் பாமக சார்பில் சவுமியா அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதுதவிர சுயேச்சைகளும் களத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+