பாட்டிலுக்கு ரூ.10 ஓகே.. தர்மபுரி டாஸ்மாக்கில் உடம்பில் ஊர்ந்த விலங்கு.. தெறித்தோடிய மதுப்பிரியர்கள்
தர்மபுரி: பூரண மதுவிலக்கு என்பது தமிழகத்தில் கனவாகி போய்க் கொண்டிருக்கிறது.. பூரண மதுவிலக்கை படிப்படியாக அரசு அமல்படுத்தலாம் என்று நீதிமன்றங்களும் கருத்து தெரிவித்து வருகின்றன.. இந்நிலையில், ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளில் நடக்கும் சம்பவங்கள், மதுப்பிரியர்களுக்கு கிலியையும், கலக்கத்தையும் தந்துவிடுகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் 2 பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளிலிருந்து அரசுக்கு குறிப்பிட்ட அளவு வருவாய் வந்து கொண்டிருக்கிறது.. தினசரி நாட்களைவிட, பண்டிகை காலங்களில் மதுபானங்கள் விற்பனையானது டபுள் மடங்காகி, வருவாய் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

ஆனால், மதுபாட்டில்களை வாங்கி செல்லும் குடிமகன்கள், மலைப்பகுதிகளில், காடுகளில், சாலையோரங்களில் வீசி விடுகிறார்கள்.. இதனால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.. கால்நடைகளின் கால்களில் இந்த பாட்டில்கள் குத்தி காயங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன..
பாட்டிலுக்கு 10 ரூபாய்
அதனால்தான், இதை தடுக்க உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி அது முறைப்படுத்தப்பட்டும் உள்ளது..
இதுஒருபுறமிருந்தாலும், டாஸ்மாக்குகளில் வாங்கப்படும் மதுபாட்டில்களில் புழு, பூச்சிகள் இருப்பதாக அவ்வப்போது செய்திகளும் வெளியாகி பகீரை கிளப்பி கொண்டிருக்கின்றன.. இரும்புத் துண்டு, ஆணி, வண்டு, போன்றவை பாட்டிலில் மிதப்பது போன்ற வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி உள்ளன..
புழு முட்டைகள் மிதந்தன
நேற்றுமுன்தினம்கூட, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் புழு முட்டைகள் கிடந்ததாம்.. கீழவலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டிலில், புழு முட்டைகள் ஏராளமாக இறந்து கிடந்துள்ளன.. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள், உடனே மதுக்கடை ஊழியரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு அந்த ஊழியர் அலட்சியமாக பதில் சொன்னாராம்..
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த டாஸ்மாக் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன..
தருமபுரி டாஸ்மாக்
இதனிடையே, தருமபுரி டாஸ்மாக்கில் நடந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடைக்கு, இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.. ஆனால், அவரது கழுத்தில் பாம்பு ஒன்றை சுற்றிக் கொண்டு வந்து, 1 பாட்டில் பீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்..
அப்போழுது டாஸ்மாக் கடைக்கு வந்திருந்த மதுப்பிரியர்கள், பாம்பை பார்த்ததுமே அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.. ஆனால், கடைக்குள் இருந்தவர்கள் எகிறி தப்பி ஓட முடியாமல் பதறிப் போய் நின்றார்கள்..
பிறகு மது வாங்க வந்த இளைஞரை கடையின் விற்பனையாளர்கள் கடுமையாக எச்சரித்து, பீர் பாட்டில் தந்து அனுப்பி வைத்து விட்டனர்..
பாம்புக்கு பீர்
ஆனால், பீர் வாங்கிய அந்த இளைஞர், உடனே பாட்டிலை திறந்து, பாம்பின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
பிறகு, அவரும் பீர் குடித்து கொண்டே, நான்கு ரோடு சாலையில் நடந்து சென்றார்.. ஆனால், வழியெல்லாம் தன்னிடமிருந்த பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்துகொண்டே போனார்..
பாம்புக்கு முத்தம்
இதனால் ரோட்டிலிருந்த பொதுமக்கள் அனைவரும் பயத்தில் தெறித்து ஓடினார்கள்.. சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டனர்..
ஆனால், அந்த இளைஞர் எதை பற்றியும் கவலைப்படாமல், பாம்புக்கு முத்தம் தந்துகொண்டேயிருந்தார், பீர் பாட்டிலை சாலை மைய தடுப்பு சுவரின் மீது வைத்துவிட்டு,வித்தை காட்டினார்.. ஆனால், அதற்குள் அங்கு வந்த போலீசார் இளைஞரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications