ரூமில் கேட்ட "பேச்சு சத்தம்".. மெல்ல எட்டிப் பார்த்த கணவர்.. செல்விக்கு வந்துச்சு பாருங்க ஆத்திரம்
தருமபுரி: தகாத உறவு வேண்டவே வேண்டாம் என்று பலமுறை மனைவிக்கு அட்வைஸ் செய்தார் ராஜாமணி. ஆனாலும் செல்வி, அதை கொஞ்சமும் காதில் போட்டுக்கவே இல்லையே.. கடைசியில் என்ன நடந்ததுன்னு பாருங்க.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி.. இவர் ஒரு விவசாய கூலித்தொழிலாளி.. 50 வயதாகிறது.. இவர் மனைவி பெயர் செல்வி..
இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இவர்களது மூத்த மகள் இறந்து விட்டார்... 2வது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். மூன்றாவது மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

செல்வி
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவருடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. ராமனுக்கு 26 வயதாகிறது.. செல்விக்கு 45 வயதாகிறது.. இவர்கள் இருவரின் உறவும் ராஜாமணிக்கு தெரியவந்துள்ளது. அதனால், மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.. இதனால், குடும்பத்தில் தகராறு வெடித்துள்ளது.. ராஜாமணி தன் மனைவிக்கு பல அறிவுரைகளை சொன்னார்.. இதுபோன்ற தவறான உறவை விட்டு விடு என்று கெஞ்சவும் செய்தார்.. ஆனால், செல்வி காதில் எதுவுமே விழவில்லை.. தொடர்ந்து தகாத உறவை கடைப்பிடித்து வந்தார்.. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ராஜாமணி, செல்வி மற்றும் மகளுடன் தூக்கிக்கொண்டு இருந்தார்.

ஆத்திரம் ஆத்திரம்
அப்போது ஏதோ பேச்சு சத்தம் கேட்டது.. இதனால், ராஜாமணி கண்விழித்து பார்த்தார்... அப்போது, வீட்டிற்குள் ராமனும், செல்வியும் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ந்து போய் நின்றார்.. இதனால் 3 பேருக்குமே அங்கேயே தகராறு வெடித்தது.. ராமனை பார்த்து ராஜாமணி ஆத்திரத்தில் திட்டவும், செல்விக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. இனியும் ராஜாமணி உயிருடன் இருந்தால் சிக்கல்தான் என்று நினைத்து, நேராக கிச்சனுக்கு சென்று, கொடுவாளை எடுத்து வந்து, ராஜாமணியை சரமாரியாக வெட்டிவிட்டார்.. அவரது தலை, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டினார்.

கொடுவாள்
இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாமணி சரிந்து விழுந்தார்... இதைப்பார்த்ததுமே ராமன் அங்கிருந்து எகிறி தப்பி ஓடிவிட்டார்.. பிறகு, செல்வியும் பின்னாடியே வெளியே ஓடினார்.. ஆனால், கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டார் செல்வி.. கொடுவாளையும் வாசற்படியிலேயே வைத்து விட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.. பிறகு நேராக தொப்பூர் ஸ்டேஷனுக்கு சென்றார்.. கணவனை வெட்டிவிட்டேன் என்று சொல்லி சரணடைந்தார்... அப்போது மணி நள்ளிரவு 1.00

ஆவேச கோலம்
ஆவேச கோலத்துடன் செல்வியை பார்த்ததுமே போலீசார் அதிர்ந்தனர்.. என்ன நடந்தது என்று கேட்டதற்கு, குடும்ப தகராறு காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டேன் என்று சலனமேயில்லாமல் சொன்னார் செல்வி.. இதனிடையே, ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்... அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அதற்கு பிறகு, ராஜாமணியின் வீட்டுக்கு தொப்பூர் போலீசார் விரைந்தனர்.. அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதுடன், போலீஸ் ஸ்டேஷனில் செல்வியிடமும் விசாரணை நடத்தினர்.

உளறல் செல்வி
அப்போதுதான் செல்வி உளற ஆரம்பித்தார்.. குடும்ப சண்டை என்று சொன்னவர், போலீசாரின் கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்வி நடந்த சம்வத்தை கூறி ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். ராமன் இப்போது தர்மபுரி ஜெயிலில் உள்ளார்.. செல்வி சேலம் ஜெயிலில் உள்ளார்.. கணவன் கண்முன்னே வீட்டில் காதலனுடன் தனிமையில் இருந்துவிட்டு, அதை தட்டிக்கேட்ட கணவனையும் கொடுவாளால் வெட்டிவிட்டு, போலீசில் வந்து கணவன் மீது பழியையும் போட்ட செல்வியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..!!

பச்சைப்பொய்
அதுமட்டுமல்ல, போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே, ராஜாமணி மீது லிஸ்ட் போட்டு குறை சொன்னாராம்.. அதாவது, ராஜாமணிக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வந்து, தன்னிடம் தகராறு செய்ததாகவும், கண்மூடித்தனமாக தன்னை தாக்கியதல்தான், அரிவாளால் கணவனை வெட்டியதாகவும் கூறியுள்ளார்.. ஆனால், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, அவர்கள் சொன்ன தகவல்கள்தான், செல்வியை போலீசாரிடம் வசமாக சிக்கவைத்துள்ளது என்கிறார்கள்.. இப்போது ராஜாமணிக்கு உடல்நிலை சீரியஸாக உள்ளதால், தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறதாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications