கோல்டு ஸ்டாரில் கெட்டு போன சிக்கன்..வீடியோவில் வீராப்பு! ரூ.10000 கேட்டு பம்மிய நவீன்..தேடும் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் கோல்டு ஸ்டார் என்ற அசைவ ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் என சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இந்த நிலையில், டிவிக்களில் பேட்டி கொடுத்த இளைஞர் ஹோட்டல் உரிமையாளரிடம் 10 ஆயிரம் பணம் கேட்ட ஆடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது மூலைக்கு மூலை உணவகங்கள் அதிகரித்து வருகிறது. அவை அனைத்திலும் கிடைக்கும் உணவுகள் தரமானவை தானா என்பது கேள்விக்குறி தான். சில உணவகங்கள் ரசாயனங்கள் கொண்டு சமையல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Dindigul Crime Food Safety Department

சில பிரபல உணவங்களில் கூட சாம்பாரில் பல்லி, சிக்கன் பிரியாணியில் புழு, பொங்கலில் கரப்பான் பூச்சி என பல செய்திகள் வந்து வாடிக்கையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சிலர் கெட்டுப் போனதாக கூறி பணம் பறிப்பதாக புகார்களையும் ஓட்டல் உரிமையாளர்கள் முன் வைக்கின்றனர்.

இந்நிலையில் ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், டிவிக்களில் பேட்டி கொடுத்த இளைஞர் ஹோட்டல் உரிமையாளரிடம் 10 ஆயிரம் பணம் கேட்ட ஆடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் திருச்சி ரோடு, கரூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட நான்கு இடங்களில் ,"கோல்ட் ஸ்டார்" என்ற பெயரில் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அசைவ உணவகத்திற்கு வந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் வந்து பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவகத்தின் ஊழியர்கள் பிரியாணி மற்றும் சிக்கனை பரிமாறியுள்ளனர். அவருக்கு பரிமாறப்பட்ட சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவருக்கு சப்ளை செய்த ஊழியரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நவீன், சமையல் அறைக்குள் உள்ளே நுழைந்து சிக்கனை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சுட வைத்து கொடுப்பதாக கூறி வீடியோ எடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சில தனியார் தொலைக் காட்சி செய்தியாளர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பாக தான் பேட்டி
தருவதாகவும், செய்தி வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த இளைஞர் உள்நோக்கத்தோடு வீடியோ எடுத்தது தெரியாமல் செய்தி சேகரிக்கும் நோக்கோடு சென்ற செய்தியாளர்கள் நவீனிடம் பேட்டி எடுத்துவிட்டு வரவே நவீன் தனது மறு முகத்தை காட்டியுள்ளார். ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்ட அவர், செய்தியாளர்கள் செய்தி வெளியிடாமல் பார்த்துக் கொள்கிறேன், அப்படி வெளியிட்டால் ஹோட்டலை சீல் வைக்கும் நிலை ஏற்படும், எனவே பத்தாயிரம் ரூபாய் கேட்டு பவ்வியமாக பேசியுள்ளார்.

இதனையடுத்து அவர் பேசியதை ரெக்கார்டு செய்த ஹோட்டல் உரிமையாளர் ஆடியோவுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த தகவல் நவீனிற்கு சென்ற நிலையில், தனது குட்டு வெளியாகிவிட்ட நிலையில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் கெட்டுப் போனதாக வைரல் ஆக்கப்பட்ட சிக்கன் மற்றும் பல உணவுப் பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு அறிக்கை வந்த பின்னரே கெட்டுப் போன உணவா இல்லையா என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அசோசியேசன் சார்பில் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட வேடசந்தூரைச் சேர்ந்த நவீன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள நவீனை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் கோல்டு ஸ்டார் உணவகத்தில் பறிமாறப்பட்ட உணவு கெட்டுப் போனது தான் எனவும், இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+