மதுபாட்டிலுக்குள் மட்டையான தவளை! சரக்கிற்குள்ளேயே சைட் டிஷ்ஷா? குமட்டிக் கொண்டு ஓடிய குடிகாரர்கள்.!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அரசு மதுபானக் கடையில் சரக்கு வாங்கினால் சைட் டிஸ் ஃப்ரீ என்பதைப் போல குவாட்டர் பாட்டிலில் இறந்த நிலையில் குட்டித் தவளை கிடந்ததால் அதிர்ச்சியடைந்த குடிகாரர்கள் குமட்டிக் கொண்டு ஓடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் 6,434 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. தனியார் மது ஆலைகளிலிருந்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் எனப்படும் டாஸ்மாக் மூலம் கொள்முதல் செய்யப்படும் மதுபான வகைகள் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது.
இதன் மூலமாக, ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.37,000 கோடி வருமானம் தமிழக அரசுக்குக் கிடைத்துவருகிறது. டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் விலையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அதிகரித்தது.

டாஸ்மாக் கடைகள்
அதன்படி குவார்ட்டர் மதுபானம் முதல் பீர்வகைகள் வரை ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.120-க்கு விற்கப்பட்ட குவாட்டர் மதுபாட்டில், தற்போது ரூ.130 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரகங்கள் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து ரூ.10, ரூ.20, ரூ.40, ரூ.80 என மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்து. இந்த விலை உயர்வின் மூலமாக தமிழக அரசுக்கு கூடுதலாக 15 சதவிகிதம் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

குடிகாரர்கள் அதிர்ச்சி
இதனால் தமிழக குடிகாரர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளான நிலையில், மதுக்கடைகளிலும் 10 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. கடை மூடப்பட்டிருக்கும் நேரங்களில் கள்ளச்சந்தைகளில் 220 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களில் பல்லி, கரப்பான் உள்ளிட்டவை கிடப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான், இந்நிலையில் திண்டுக்கல் அருகே அரசு மதுபானக் கடையில் சரக்கு வாங்கினால் சைட் டிஸ் ஃப்ரீ என்பதைப்போல குவாட்டர் பாட்டிலில் இறந்த நிலையில் குட்டித் தவளை கிடந்ததால் அதிர்ச்சியடைந்த குடிகாரர்கள் குமட்டிக் கொண்டு ஓடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதுபாட்டிலில் தவளை
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தரேவு பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் குவாட்டர் பாட்டில் வாங்குவதற்காக சென்ற மதப்பிரியர் குவாட்டர் வாங்கியதும் பாட்டிலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாட்டிலுக்குள் மதுவுடன் கலந்து குட்டித் தவளை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மதப்பிரியர் கடையில் வேலை செய்யும் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுபாட்டில் வாங்கினால் சைடிஸ் ஃப்ரீ என்பதைப்போல மதுவுடன் இறந்த நிலையில் கிடந்த தவளை மது பாட்டில் வாங்க வந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடும் வாக்குவாதம்
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களில், பூச்சி, பல்லி கிடந்த நிலையில் தற்போது தவளை கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது பாட்டில்களின் விலை உயர்வு காரணமாக சாமானிய மது பிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஷ ஜந்துக்கள் மதுவுடன் கலந்து அதனை பருகும் பொழுது உயிர்பலி ஏற்படும் நிலையும் உள்ளது. மதுவுடன் இறந்த நிலையில் குட்டித் தவளை இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications