"சைக்கோ" கணவன்.. மனைவிக்கே வீடியோவை அனுப்பி மிரட்டல்.. திறந்து பார்த்தால் ஷாக்.. அலறிய பெண்!
கீழ இறங்கு.. மனைவியை இறக்கிவிட்டுவிட்டு.. காரில் திண்டுக்கல்: தனது மனைவிக்கு மோசமான வீடியோ ஒன்றை அனுப்பி மிரட்டல் விடுத்த நபரின் வீடியோ இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
திண்டுக்கல்லை மாவட்டம் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வருபவர் ஆனந்த். அந்த ஹோட்டலில் பணியாற்றும் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை அடிப்பதை இவர் வழக்கமாக வைத்து இருந்துள்ளார்.

குடிப்பழக்கம்
முக்கியமாக அடிக்கடி குடித்துவிட்டு வந்து அவர் தனது மனைவியை தாக்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். கடந்த வாரம் இதேபோல் ஒருநாள் குடித்துவிட்டு வந்துள்ளார். முழு போதையை மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். மனைவி வீட்டிலேயே அலறிய படி துடித்துள்ளார். தட்டிக்கேட்க வந்தவர்களையும் மோசமாக தாக்கி உள்ளார்.

கம்பிகள்
வீட்டில் இருந்த கம்பிகளை வைத்து கணவர் அந்த பெண்ணை தாக்கி உள்ளார். அந்த பெண் இவ்வளவு நாள் பொறுத்து பொறுத்து பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசும் பெண் கொடுமை செய்ததாக கூறி அந்த நபரின் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் விசாரணைக்கு வரும்படியும் போலீசார் அந்த நபருக்கு உத்தரவிட்டுள்ளனர். விசாரணைக்கு செல்லாத அந்த நபர் மீண்டும் தனது ஹோட்டலுக்கே போய் அங்கேயே தங்கி வேலை செய்துள்ளார்.

ஹோட்டல்
அதே ஹோட்டலில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில இளைஞர் ஒருவருடன் ஆனந்த் வாக்குவாதம் செய்து சண்டை செய்துள்ளார். தான் வசிக்கும் அறைக்கு அந்த வடமாநில இளைஞரை அழைத்து சென்று மிக மோசமாக தாக்கி உள்ளார் ஆனந்த். வடமாநில இளைஞரை இவர் இரும்பு கம்பியால் போட்டு சரமாரியாக தாக்கி உள்ளார். அதோடு தலையில் கட்டையை வைத்தும் தாக்கி உள்ளார். ஆனந்த் வீடியோவாக போன் மூலம் எடுத்துள்ளார்.

வீடியோ
இதற்கு பின்னர் ஆனந்த் தனது மனைவிக்கு இந்த வீடியோவை அனுப்பி உள்ளார். அதில்.. இந்த வீடியோவில் இவரை அடிப்பது போலத்தான் உண்மையும் அடிப்பேன். ஒழுங்காக போலீசுக்கு கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிடு. இல்லையென்றால் உனக்கும் இதே கதிதான் என்று மிரட்டி உள்ளார். இதை பார்த்த அந்த பெண் அரண்டு போய் போலீசில் இவரை பற்றி புகார் கொடுத்துள்ளார். இவரின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications