நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கீழ இறங்கு.. மனைவியை இறக்கிவிட்டுவிட்டு.. காரில் "மச்சினியை" கடத்திய எஸ்ஐ.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

நீலகிரி: கட்டிய மனைவியை விட்டுவிட்டு அவரது தங்கையை திருமணம் செய்துகொள்ள அவரை காரில் கடத்திய விவகாரத்தில் கூடலூர் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கெதிராக நீண்ட நெடிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

இந்நிலையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர்களே, இந்த வன்முறையில் ஈடுபடும்போது பாதுகாப்பு அமைப்பின் மீதான நம்பிக்கை கேள்விக்கு உள்ளாகிறது.

நடிகை அமலா பாலுடன் திருமணம்.. கோர்ட்டில் ஆதாரங்களை காட்டி நடிகை அமலா பாலுடன் திருமணம்.. கோர்ட்டில் ஆதாரங்களை காட்டி

 ஈரோட்டில் எஸ்ஐ

ஈரோட்டில் எஸ்ஐ

அந்த வகையில் காவல்துறையில் நடந்த இந்த மோசமான சம்பவத்திற்கு காரணமானவரை டிஐஜி பணிநீக்கம் செய்திருப்பது, மீண்டும் காவல்துறை மீதான நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது. கடந்த 2018ல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருக்கு திருமணமான நிலையில், கடந்த 2018லிருந்து கோபி மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இவர் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணமிருந்தன.

மனைவியின் தங்கை மீது மோகம்

மனைவியின் தங்கை மீது மோகம்

இந்நிலையில், இவரும் இவரது மனைவி மற்றும் உடன் மனைவியின் தங்கை ஆகியோர் மதுரையில் உள்ள கோயிலுக்கு செல்வதற்கு காரில் புறப்பட்டுள்ளனர். இதில் மனைவியின் தங்கை பி.எட் படித்து வரும் மாணவியாவார். இந்த மாணவியை தனது மனைவியாக்கும் விபரீத எண்ணத்தில் மதுரையில் உள்ள ஒரு போலீஸ் சோதனை சாவடியில் மனைவியை தனியாக இறக்கிவிட்டு, அவரது தங்கையை காரிலேயே வைத்து கடத்தியுள்ளார்.

கடத்தல்

கடத்தல்

இதையறிந்து உஷாரான மனைவி இதர காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் இதர சோதனை சாவடியில் இருந்த காவலர்கள் எஸ்ஐ-யின் காரை சேசிங் செய்து பிடித்தனர். இதனையடுத்து எஸ்ஐ வெங்கடாச்சலம் மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் கடத்தல் சம்பவம் உண்மையென தெரியவந்தது. இதனையடுத்து வெங்கடாச்சலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பணி நீக்கம்

பணி நீக்கம்

பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த எஸ்ஐ வெங்கடாச்சலம், நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இதனையடுத்து மனைவியின் தங்கையை கடத்திய வழக்கில் வெங்கடாச்சலத்தை பணிநீக்கம் செய்து கோவை சரக டிஐஜி முத்துசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிஐஜி முத்துசாமியின் உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
A Cuddalore police assistant inspector has been sacked in connection with the case of abducting his wife to marry her younger sister. As violence against women continues to rise across the country, we are at a point where we have to wage a long-term struggle against it. In this case, the people who are supposed to ensure security, when they engage in this violence, the trust in the security system is called into question.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X