மீண்டும் பீதியில் திண்டுக்கல்! பழனி மாவட்டமானால் வருவாய் கதி?வேடசந்தூர், குஜிலியம்பாறை எங்கே சேரும்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பழனி புதிய மாவட்டம் உருவாக்கக் கூடும் என மீண்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் அச்சத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவானதுதான் திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு காலத்தில்தான் பூட்டு தொழிலும் தோல் தொழிலும் கொடி கட்டிப் பறந்தன. காலப் போக்கில் வறட்சி பாதிப்பின் பிடியில் சிக்கி வேடசந்தூர், வடமதுரை பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள் களமிறங்கிவிட்டன. இதற்கு காரணம் வறட்சி பாதித்த பகுதியில் அமையும் நூற்பாலைகளுக்கான சலுகைகள்தான் முக்கியம். இதனைத் தவிர திண்டுக்கல் மாவட்டத்தின் பிரதான வருவாய் தருபவை பழனி மலை பழனியாண்டவர் திருக்கோவில், கொடைக்கானல் சுற்றுலா தலம். ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையும் முதன்மையான ஒன்றுதான்.

திண்டுக்கல் வருவாய் என்னாகும்?: தற்போது பழனியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனி மாவட்டம் உருவாக்கப்படலாம் என்கிற பேச்சு மீண்டும் வேகமாக அடிபட தொடங்கி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பழனி தனி மாவட்டமாகும் என்கிற பேச்சு இருந்து வருகிறது. நடைமுறையில் பழனி தனி மாவட்டமானால் கொடைக்கானலும் இயல்பாகவே பழனி மாவட்டத்தில்தான் சேரக் கூடும். ஒட்டன்சத்திரமும் பழனியுடன் தான் இணைய வேண்டும். அதாவது திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருவாய் தரக் கூடிய அத்தனை அம்சங்களுமே கூண்டோடு பழனிக்கு போய்விடும். அப்படியானால் திண்டுக்கல் மாவட்டத்தின் வருவாய் என்னவாகும் என்கிற கேள்வி உருவாகிறது.
புதிய மாவட்டங்கள் : அமைச்சர் அறிவிப்பால் பழனியை முன்வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் குழப்பம்!
குஜிலியம்பாறை எங்கே போகும்?: வேடசந்தூருக்கே இந்த கதி என்றால் வேடசந்தூருக்கும் வடக்கே இருக்கக் கூடிய குஜிலியம்பாறை என்னவாகும்? குஜிலியம்பாறைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே 50 கிமீ. ஆனால் குஜிலியம்பாறைக்கும் கரூருக்கும் இடையே 35 கிமீதான். வேடசந்தூர் வட்டமே பழனிக்கு போகும் போது அதைவிட தொலைவில் இருக்கும் குஜிலியம்பாறையும் பழனி மாவட்டத்துடன் இணையத்தான் முடியும். அதற்கு பேசாமல் எங்களை கரூர் மாவட்டத்திலேயே இணையுங்கள் என்கிறது ஒரு தரப்பு. ஏற்கனவே குஜிலியம்பாறை தனி வட்டமாக பிரிக்கப்பட்ட போதே எங்களை வேடசந்தூர் வட்டத்துடன் இருக்க விடுங்கள் என கோரிய சில பகுதி மக்கள் இப்போது என்னது கரூரா? பழனியா? என அலறுவதையும் கேட்க முடிகிறது.
மீண்டும் மீண்டும் குழப்பத்தில்தான் திண்டுக்கல்!












Click it and Unblock the Notifications