நேரில் வந்த சசிகலா! உருகிய ஓபிஎஸ்! எட்டிக் கூட பார்க்காத எடப்பாடி! மாயத்தேவருக்கு மரியாதை இல்லையா?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியான மாயத்தேவர் மரணம் அடைந்த நிலையில் சசிகலா ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிக்கை விட்டதோடு நின்று கொண்டதாகவும் இரட்டை இலையை பெற்று தந்த அவருக்கு இதுதான் மரியாதையா என அதிமுக தொண்டர்களும் மாயத் தேவரின் உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recommended Video

    ADMK Fight-க்கு காரணம் DMK தான் | VK Sasikala Speech

    அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே மாயத்தேவர், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள‌ அவருடைய இல்லத்தில் நேற்று காலமானார்.

    எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய நேரத்தில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் வந்தபோது, அதிமுக சார்பில் இரட்டை சிலை சின்னத்தில் மாயத்தேவரை வேட்பாளராக நிறுத்தினார் எம்ஜிஆர். அந்த தேர்தலில், மாயத்தேவர் வெற்றி பெற்றது, அரசியலில் திருப்பு முனையாகப் பார்க்கப்பட்டது.

    மாயத்தேவர் மரணம்

    மாயத்தேவர் மரணம்

    அவரது மறைவையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பாக திண்டுக்கல் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாயத் தேவர் உடலுக்கு கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், முன்னாள் எம்எல்ஏகள் பரமசிவம், ஜக்கையன், முன்னாள் எம்.பி.பார்த்திபன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி, உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    ஓபிஎஸ் - சசிகலா

    ஓபிஎஸ் - சசிகலா

    இதேபோல் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி, சுப்புரத்தின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன், மோகன் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, அவருடன் அமமுக மாவட்ட செயலாளர் ராமுத் தேவர் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    எடப்பாடி மிஸ்ஸிங்

    எடப்பாடி மிஸ்ஸிங்

    இந்நிலையில் தான் அறிக்கை விட்டதோடு நின்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மாயத்தேவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாததை ஏன் என அதிமுக தொண்டர்களும் மாய தேவரின் உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் திண்டுக்கல் வந்த நிலையில் அவரது உடல் நலன் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விசாரிக்க கூட இல்லை எனவும் தொடர்ந்து ஈரோடு சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி என சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் இன்று காலை சென்னை அருகே நடைபெற்ற அதிமுக நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கலந்து கொண்டார்.

    உறவினர்கள் கேள்வி

    உறவினர்கள் கேள்வி

    மாயத்தேவர் மரணம் குறித்து நேற்று அறிக்கை விட்ட ஓ.பன்னீர்செல்வம் சசிகலா ஆகியோர் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வராதது ஏன் எனவும் அதிமுகவின் முக்கிய அடையாளமான இரட்டை இலையை பெற்று தந்த அவருக்கு இதுதான் செய்யும் மரியாதையா என மாயத்தேவரின் உறவினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+