எஸ்வி சேகர் வர்றாரு! தாலி கட்டும் நேரத்தில் குண்டு வெடிக்கும்.. கல்யாண மண்டபத்துக்கு வந்த போன் கால்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல நடிகரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ்வி சேகர் கலந்து கொள்ளவிருந்த திருமண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாலிகட்டும் நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மணமக்களின் வீட்டார் கலக்கமடைந்தனர்.
திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வேலு மஹால் என்ற தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்த நிலையில் மணமகன் மணமகள் வீட்டார் உறவினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென அந்த திருமண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் உடனடியாக அந்த மண்டபத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நீண்ட நேர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என தெரிய வந்தது.
திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் உறவினர்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் அந்த மண்டபத்துக்கு பிரபல நடிகரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ்வி சேகர் வருகை தர இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக - அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த எஸ்வி சேகர் தற்போது திமுக ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications