Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதே மாட்டு கறி இல்லையா? சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் உணவு திருவிழா! பரபரப்பை கிளப்பிய பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட உணவுத் திருவிழாவில் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டதா என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Recommended Video

    Beef-க்கு Stall வைக்க யாரும் வரல | Ma.Subramanian Speech

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து அதனை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு, ஊர்வலங்கள் என நாடு முழுவதும் களைகட்டி வரும் நிலையில் வீடுதோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

     உணவு திருவிழா

    உணவு திருவிழா

    இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மக்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் உணவுத்திருவிழா திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

    மட்டன் சிக்கன் பிரியாணி

    மட்டன் சிக்கன் பிரியாணி

    முன்னதாக காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் தொடக்க நிகழ்ச்சியாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் சுயஉதவிக்குழு பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மண்டபத்தில் திண்டுக்கல் உணவுத்திருவிழாவை திண்டுக்கல் மேயர் இளமதி தொடங்கி வைத்தார். அங்கு ஒரு உணவகம் சார்பில் மட்டன், சிக்கன் பிரியாணி வைக்கப்பட்டிருந்தது.

    பீஃப் பிரியாணி புறக்கணிப்பு

    பீஃப் பிரியாணி புறக்கணிப்பு

    மேலும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என பல அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தான் திண்டுக்கல்லில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தனியார் உணவகம் சார்பில் பலவகையான பிரியாணிகள் வழங்கப்பட்ட நிலையில் மாட்டுக்கறி பிரியாணி மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த பிரியாணிக்கும் தடை விதிக்கவில்லை எனவும் யாரும் மாட்டுக்கறி பிரியாணி விற்பனை செய்ய முன் வரவில்லை என கூறி இருக்கிறார்.

    சர்ச்சை

    சர்ச்சை

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி தடை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து உணவு திருவிழாக்களில் மாட்டுக் கறி பிரியாணியை தவிர்க்கக்கூடாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் அரசு நிகழ்ச்சியில் மீண்டும் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிக்கப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+