திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரியில்லையே.. முதல் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்! மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீஸ் தடியடி!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கொசவபட்டி ஜல்லிக்கட்டு விழா 4 மணியுடன் நிறைவடைய இருந்த ஜல்லிக்கட்டு விழா 2.10 மணி அளவில் விதிமுறைகளை பின்பற்றாததால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஜல்லிக்கட்டு விழாவை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.

தென் தமிழகத்திலேயே அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது இங்கு கொசவபட்டி புகையிலைப்பட்டி பிள்ளம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வழக்கம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சொல்லி அடித்த கைக்குறிச்சி காளை.. 26 காளைகளை அடக்கி 'கார்’ வென்ற வீரர்! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சொல்லி அடித்த கைக்குறிச்சி காளை.. 26 காளைகளை அடக்கி 'கார்’ வென்ற வீரர்!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது கொசவபட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தபடும் இங்கு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கு மதுரை,திருச்சி, புதுகோட்டை,தேனி திண்டுக்கல் ,அலங்காநல்லூர், பாலமேடு நத்தம் மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காளைகள் பங்குபெறும்.

சீறிப்பாய்ந்த காளைகள்

சீறிப்பாய்ந்த காளைகள்

இந்த ஆண்டு 500 காளைகள் பங்கேற்க வருகை தந்தது. போட்டியில் காளைகளை அடக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 500 பேர் பங்கேற்றனர். காலை 8.00 மணிக்கு ஆரம்பமான ஜல்லிக்கட்டு மதியம் 2.00 மணி வரை நடத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் 200 காவலர்கள் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் . மருத்துவ குழுக்கள் மாடுகளை சோதனை செய்ய கால்நடை மருத்துவர்கள்,தீயணைப்பு துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.

வீரர்கள் உற்சாகம்

வீரர்கள் உற்சாகம்

பின்பு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், ஆட்டுகுட்டி, சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசு பொருட்களை வீரர்கள் தட்டி சென்றனர். அதே போல் களத்தில் மாடுபிடி வீரர்களுக்கு அடங்காமல் நின்று விளையாடிய மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போது ஒருவரது மாடு வாடி வாசல் வழியாக வெளியேறி காளை மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெளியேறி ஓடியது.

கிணற்றில் விழுந்த மாடு

கிணற்றில் விழுந்த மாடு

வெளியே வந்த மாடு வழி தெரியாமல் ஓடியதில் கொசவபட்டி நாடகமேடை பின்புறம் உள்ள தனியார் தோட்டத்து மொட்டை கேணியில் விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த மாடு சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது. கடந்த முறை ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது மாடு ஒன்று கேணியில் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தாண்டும் அதே போல் நடந்ததோடு அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடைபெற்றது.

போட்டி நிறுத்தம்

போட்டி நிறுத்தம்

இந்நிலையில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழாவான கொசவபட்டி ஜல்லிக்கட்டு விழா 4 மணியுடன் நிறைவேற கூடிய ஜல்லிக்கட்டு விழா 2.10 மணி அளவில் விதிமுறைகளை பின்பற்றாததால் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஜல்லிக்கட்டு விழாவை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். போட்டியில் பங்கேற்ற வீரர்கள் முறையாக விதிகளை கடைபிடிக்காததாலும், மாட்டின் உரிமையாளர்கள் முறையாக மாடு அவிழ்க்காததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

English summary
Dindigul District Nattam Kosavapatti jallikattu festival which was supposed to end at 4 o'clock, Dindigul District Superintendent of Police Bhaskaran stopped the jallikattu festival midway at 2.10 p.m.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X