கரண்டை பார்த்ததே இல்லை சார். இருட்டில் வாழும் நிகழ்கால ‘அத்திப்பட்டி’.. கருணை காட்டுவாரா கலெக்டர்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் அருகே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல, மின்சாரம் இன்றி பல தலைமுறைகளாக தவிக்கும் அந்த பகுதி மக்கள் இதுவரை டிவி, மிக்ஸி என்றால் என்னவென்றே தெரியாது என வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் குடிநீர் சாக்கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் வெளிச்சம் பெற தமிழ்நாடு முதலமைச்சர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே தென்னம்பட்டி ஊராட்சி பெருமாள் பெருமாள் கோவில்பட்டியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்பதை பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

30 வீடு குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் ஐந்து வீட்டுகளுக்கு மட்டுமே மின்சார வசதி உள்ளது. மீதமுள்ள அனைத்து வீடுகளிலும் மின்சார வசதி இன்றி காணப்படுகிறது. அருகே இருக்கும் சோலார் கம்பெனியிலிருந்து ஒரே ஒரு சோலார் கம்பத்தை ஊன்றி அதன் மூலம் கரண்ட் வருகிறது.
அதுவும் போதுமான அளவுக்கு வருவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டு காலமாக நீண்ட நாள் போராட்டமாக மின்சாரம் வேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறை சார்பில் பெருமாள் கோவில் வரை மின் கம்பங்கள் ஊன்றி மின்சாரம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது மூன்று மின்கம்பங்கள் ஊன்றுவதற்காக தயார் நிலையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் மின் கம்பங்கள் ஊன்றாமல் வேறு பகுதியில் ஊன்றுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் தங்களை புறப்பணிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். மேலும் பெருமாள் கோவில்பட்டி இருக்கும் பகுதி மிகவும் வறட்சியாகவும் பழங்கால கட்டிட வீடுகளாகவும் காணப்படுகிறது.
குறிப்பாக சொல்லப் போனால் சிட்டிசன் சினிமா படம் காட்சியில் வருவது போல் அத்திப்பட்டி கிராமம் போலே உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள தாய்மார்கள் தெரிவிக்கையில் எங்களுக்கெல்லாம் வீட்டில் டிவி, மிக்ஸி போன்ற பொருட்கள் பயன்படுத்த ஆசை இருந்தும் மின்சாரம் இல்லாமல் போவது வேதனை அடைவதாக கூறுகின்றனர்.

எங்கள் தலைமுறை தான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தும் அடுத்த தலைமுறைகளாவது அடிப்படை வசதிகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றும் நினைக்கிறோம், அந்த ஆசை நிறைவேறுமா என்று தமிழக முதல்வர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிடுகிறார். இந்த நிலையில் பெருமாள் கோவில்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆய்வு நடத்தி மக்களின் குறையை தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications