திண்டுக்கல்லில் அதிகாலையில் 17 வயது சிறுவனோடு.. ராஜேஸ்வரி செய்த காரியம்.. ஆடிப்போன ஊர் மக்கள்
திண்டுக்கல்: தங்கத்தின் விலை ஒரு பவுன் 81 ஆயிரத்தை கடந்துவிட்டது. செய்கூலி சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து தங்கம் விலை ஒரு சவரன் குறைந்தது 95 ஆயிரம் என்கிற அளவிற்கு இருக்கிறது. இதனால் இருக்கும் தங்கத்தை பாதுகாத்தால் போதும் என்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தங்க நகைகளை கொள்ளையடிப்பதும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் அருகே மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 3 பவுன் சங்கிலியை பறித்து பெண் ஒருவர் பறித்து சென்றுள்ளார். பிளஸ்-2 மாணவன் உதவியும் செய்துள்ளார்.
தங்க நகை அணிந்து கொண்டு சாலையில் நடந்து செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுமா இப்படி கேட்கவே முடியாத அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. ஒரு பெண் அதிகாலையிலேயே தங்க நகையை பறிக்க செய்த வேலை திண்டுக்கல்லையே ஆடிப்போக வைத்துள்ளது.

திண்டுக்கல் எரியோடு
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள பாகாநத்தத்தை சேர்ந்த 87 வயதாகும் அய்யம்மாள் என்பவர் தனியாக கூரை கொட்டகையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் அய்யம்மாள் கடையை திறந்துள்ளார். அப்போது ஒரு பெண் மற்றும் சிறுவன் உள்பட 2 பேர் கடைக்கு வந்ததிருக்கிறார்கள்.
தங்க நகை பறிப்பு
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளம் பெண்ணும், சிறுவனும் சேர்ந்து, அவர்கள் திடீரென்று அய்யம்மாளின் கண்களில் மிளகாய் பொடியை தூவியிருக்கிறார்கள். இதனால் கண் எரிச்சல் தாங்காமல் அய்யம்மாள் அப்படியே கீழே அமர்ந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண்ணும் சிறுவனும் சேர்ந்து அய்யம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
கூச்சலிட்ட அய்யம்மாள்
இது குறித்து கூச்சலிட்ட அய்யம்மாள், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை அப்படியே கூறி புகார் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், சம்பவம் நடந்தபோது அந்த வழியாக வந்தவர்கள் யார், யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ஒரு சிறுவனும், ஒரு பெண்ணும் அப்பகுதியில் நடமாடியது தெரியவந்தது. இதையடுத்து 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தார்கள்.
கரூரில் தலைமறைவான ராஜேஸ்வரி
போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்பவர் அய்யம்மாளிடம் இருந்து சங்கிலியை பறித்து சென்றதும், அவர் கரூருக்கு சென்று தலைமறைவாகி இருப்பதும் உறுதியானது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஸ்வரியை பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
ராஜேஸ்வரி சிறையில் அடைப்பு
பின்னர் ராஜேஸ்வரி மற்றும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த பிளஸ்-2 மாணவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரும் வேடச்சந்தூர் கோர்ட்டில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வேடசந்தூர் நீதிபதி உத்தரவின்பேரில், ராஜேஸ்வரி நிலக்கோட்டை மகளிர் சிறையிலும், சிறுவன் திண்டுக்கல் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். இநத் சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications