சில்லிங் சரக்கு.. திமுக பிரமுகர்.! ரத்த சகதியில் மாண்ட மாயாண்டி! காத்திருந்து கருவறுத்த கும்பல்..!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க பிரமுகருமான மாயாண்டி ஜோசப் இரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளாக்கில் மது விற்க மதுபானங்களை எடுத்துச் சென்றவரை வழிமறித்து தலையையே சிதைத்து கொடூரமாக கொன்றுள்ளனர் கொலையாளிகள்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுபதி பாண்டியன் ஆதரவாளரும் பிரபல ரவுடியுமான தீபக் ராஜா மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது முகத்தை குறிவைத்து கொலை கும்பல் சிதைத்து கொலை செய்தது. தற்போது அதேபோல ஒரு கொலை சம்பவம் திண்டுக்கல்லில் நடைபெற்றிருக்கிறது.
திமுக பிரமுகர்: இந்நிலையில் திண்டுக்கல்லில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க பிரமுகருமான மாயாண்டி ஜோசப் என்பவர் இரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அடியனுத்து பஞ்சாயத்திற்குட்பட்ட யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (வயது 60). இவர் தற்பொழுது திண்டுக்கல் அடுத்துள்ள வேடப்பட்டியில் வசித்து வருகிறார். இவர் திமுக பிரமுகராவார். அடியனூத்து ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.
பார் உரிமையாளர்: இவரது மனைவி நிர்மலா. இவரும் முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக இருந்தார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் நிர்மலா இறந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்துகிறார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் மற்ற 2 பிள்ளைைைகளும் வெளியூரில் படிக்கின்றனர். இந்நிலையில் மாயாண்டி ஜோசப், மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசிக்கிறார்.
வண்டியில் மதுபாட்டில்கள்: இதற்கிடையே நேற்று இரவு மாயாண்டி ஜோசப், யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து டூவீலரில் வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்றார். வாகனத்தில் அடுத்த நாள் காலையில் ப்ளாக்கில் விற்பனை செய்வதற்காக 3 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தன. இந்நிலையில் அவர் செல்லும் வழியில் அவரது வருகைக்காக முன்னரே காத்திருந்த மர்ம கும்பல் எதிர் திசையில் டூவீலரில் வந்து மாயாண்டி ஜோசப், மீது மோதினர்.
வெட்டிப் படுகொலை: இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பியது. குறிப்பாக அவரது தலையை சிதைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா போலீசார் மாயாண்டிஜோசபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்ன காரணம்?: கொலையான மாயாண்டி ஜோசப் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு காரணத்திற்காக கொலை நடைபெற்றதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பும் விசாரணை நடத்தினார். தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications