வீட்டுமனை தர்றோம்.. அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரை சொல்லி ஆட்டைய போடும் கும்பல்! யார் அந்த ‘ஒன்றியம்’?
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெயரைச் சொல்லி வீட்டு மனை பிரித்துக் கொடுப்பதாகக் கூறி திண்டுக்கல் நகர்ப் பகுதியில் 'ஒன்றிய' நிர்வாகி ஒருவர் பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், அமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் தக்க வைத்ததின் மூலம் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சி யில் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை திமுக அதி க பெரும்பான்மையுடன் கைப்பற்றி திண்டுக்கல் மாநகரை கைப்பற்றியது திமுக.

அமைச்சர் ஐ.பி.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை தனது கோட்டையாகவே திமுக முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஐ.பி. உருவாக்கி வைத்துள்ளதோடு, தனது தொகுதி இல்லை என்றாலும் திண்டுக்கல்லுக்கும் நான் தான் அமைச்சர் என்று கூறி திண்டுக்கல் சட்ட மன்ற தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க தானே களமிறங்கி இருக்கிறார்.

வீட்டுமனை மோசடி
அப்படி இருக்கும் போது அமைச்சர் ஐ.பி.பெயரைச் சொல்லி திமுக நிர்வாகிகள் சிலர் அப்பாவி மக்களுக்கு வீட்டுமனை வாங்கி கொடுப்பதாக கூறி பண வசூலில் இறங்கி இருப்பதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில் திண்டுக்கல் மாநகரப் பகுதியில் உள்ள ஒய்.எம்.ஆர்.பட்டி, கோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அப்பாவி பொதுமக்களிடம் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு மனை வழங்க உள்ளதாகவும், திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி காவலர் குடியிருப்பு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீட்டு மனை பிரித்து விற்காத இடத்தை 600 நபர்களுக்கு 3 சென்ட் அளவுக்கு தருவதாக கூறியுள்ளனர்.

அமோக வசூல்
இதற்கு கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ரூ.2000 ரூபாயும் மற்றும் பொதுமக்களின் ஆதார் கார்டு இரண்டு போட்டோ உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றனர். மேலும் மீதம் 50 ஆயிரம் ரூபாயை பின்னர் தர வேண்டும் என்று கூறி திமுகவைச் சேர்ந்த ஒரு 'ஒன்றிய' அளவிலான நிர்வாகியும் அவரது ஆதரவாளர்களும் அப்பாவி மக்களிடம் திண்டுக்கல்லில் அமோக வசூலில் ஈடுபட்டு வருவதாக" கூறப்பட்டு இருந்தது.

கோரிக்கை
இதுசம்பந்தமாக அமைச்சரின் தீவிரவிசுவாசிகள் சிலரிடம் கேட்ட போது," திண்டுக்கல் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கடந்த 10 வருடங்க ளுக்கு முன்பே அம ச்சர் ஐ.பி.கொடுத்திருக்கி றார். ஆனால் தற்பொழுது பொதுமக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதாக அமைச்சர் எதுவுமே சொல்லவில்லை. அப்படி இருக் கும்போது அமைச்சர் பெயரைச் சொல்லி கட்சி நிர்வாகிகள் யாரும் பணம் கேட்டால் அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் இறங்கி இருக்கிறார்கள். இதுகுறித்து அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications