திண்டுக்கல்லில் பத்திரப்பதிவு.. ஆசை ஆசையாய் காத்திருந்த கரூர் வக்கீல்.. 61 லட்சம் ஏமாந்தது எப்படி?
திண்டுக்கல் : கரூர் மாவட்டம் அரங்கநாதபேட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் என்பவரிடம் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறியிருக்கிறார்கள். அதனை நம்பிய தனசேகரன் 5 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.75 லட்சத்துக்கு வாங்குவதற்கு கிரைய உடன்படிக்கை செய்யப்பட்டிருக்கிறது. நிலத்துக்கான தொகை என பல்வேறு தவணைகளாக ரூ.61 லட்சத்து 40 ஆயிரத்தை தனசேகரன் கொடுத்தாராம். ஆனால் சொன்னபடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் 2 பேரும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாய நிலங்கள் மற்றும் சொத்து விற்பனையில் பல்வேறு வகையான மோசடிகள் நடக்கிறது. நிலத்தின் அசல் ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல் போன்றவற்றைத் போலியாகத் தயாரித்து, அவற்றை வைத்து விற்பனை செய்வது அதிக அளவில் நடக்கிறது. அதேபோல் ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்குத் தனித்தனியாகப் பதிவு செய்து பணம் வாங்கி கொள்வார்கள். ஆனால் வேறொருவருக்கு விற்பனைப் பத்திரம் பதிவு செய்வது செய்வர்கள். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளும் அதிகமாக இருக்கும்.

ஆக்கிரமிப்பு மோசடி
அதேபோல் சென்னை செங்கல்பட்டு உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளில், பொதுப் பாதை, நீர்வழிப் பாதை (ஓடை), அல்லது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை விற்பனை செய்வதும் அதிகமாக இருக்கும். அதேபோல் நிலத்தின் உண்மையான எல்லையை மறைத்து, அதிகப் பரப்பளவைக் காட்டுவது அல்லது பக்கத்து நிலத்தையும் சேர்த்து விற்பனை செய்வதையும் காண முடிகிறது.
வாரிசுகள் சிக்கல்
மேலும் நிலத்திற்குப் பல வாரிசுகள் இருக்கும்போது, ஒரு வாரிசு மட்டும் மற்றவர்களின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு நிலத்தை விற்றுவிடுவதும் நடக்கிறது. அதேபோல் அக்ரிமெண்ட் போட்டு நிலத்தை விற்பதாக முடிவு செய்வார்கள். பாதி தொகை அட்வான்ஸ் வாங்கிய பின்னர் நிலத்தை வேறு ஒருவருக்கு தந்துவிட்டு, பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்வார்கள். அப்படியான மோசடி தான் திண்டுககல் மாவடட்ததில் நடந்துள்ளது.
விவசாய நிலம்
கரூர் மாவட்டம் அரங்கநாதபேட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். வக்கீல். இவரிடம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வி.புதுக்கோட்டை கிராமத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளதாக 2 பேர் கூறியிருக்கிறார்கள். அதை உண்மை என நம்பிய தனசேகரன் நிலத்தை வாங்க முடிவு செய்தார். அதையடுத்து 5 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.75 லட்சத்துக்கு வாங்குவதற்கு கிரைய உடன்படிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
கிரைய ஒப்பந்தம்
அதன்பேரில் முன்பணம், கிரைய ஒப்பந்த தொகை, நிலத்துக்கு வேலி அமைக்க செலவு தொகை, நிலத்துக்கான தொகை என பல்வேறு தவணைகளாக ரூ.61 லட்சத்து 40 ஆயிரத்தை தனசேகரன் கொடுத்திருக்கிறார். ஆனால் பேசியபடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் 2 பேரும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இரண்டு பேர் கைது
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனசேகரன் புகார் அளித்தார். அப்போது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தும்படி திண்டுக்கல் எஸ்பி பிரதீப் உத்தரவிட்டார். அதன்பேரில் கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, தேக்கமலை, சுரேஷ்குமார், வானவில் பாஸ்கர், நரசிம்மபுரத்தை சேர்ந்த ஹேமலதா ஆகிய 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சத்தியமூர்த்தி, ஹேமலதா ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications