கொடைக்கானல் அடுக்கம் சாலையில்.. ஊட்டியில் இருந்து வந்த பெண்.. சுற்றிபார்க்க போன போது விபரீதம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பெருமாள் மலை கிராமம் இருக்கிறது. இங்கிருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் தேனிக்கு செல்ல தனிப்பாதை உள்ளது. இதில் சாமக்காட்டு பள்ளம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. ஊட்டியைச் சேர்ந்த தீபிகா என்ற பெண் திருமணத்திற்கு வந்திருந்தார். திருமணம் முடிந்ததும், தீபிகா செல்லத்துரையின் தோட்டத்தை சுற்றிப்பார்க்க ஜீப்பில் சென்றுள்ளார். அப்போது தான் யாரும் எதிர்ப்பார்க்காத சம்பவம் நடந்தது.

கொடைக்கானலுக்கு செல்ல வத்தலக்குண்டு காட்ரோடு வழியாக பிரதான வழி இருக்கிறது. இது எளிதான வழியாகும். அடுத்ததாக பழனியில் இருந்து பெருமாள் மலை வழியாக கொடைக்கானலுக்கு பாதை உள்ளது. இது கோவை வழியாக வருவோருக்கான பாதையாக இருக்கிறது. இது சற்று கடினமான பாதையாகும்.

kodaikanal adukkam Road What happened to Ooty girl Deepika who came to Kodaikanal for a wedding

அடுத்ததாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக பெருமாள் மலையை அடைந்து கொடைக்கானல் போகலாம். இந்த பாதை மிகவும் ஆபத்தான பாதையாகும். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானங்கள் போக முடியும். கனரக வாகனங்கள் செல்வதற்கு உகந்த சாலை கிடையாது. கார்களில் செல்பவர்களுமே மிக அனுபவம் உள்ளவர்களே ஓட்டி செல்ல முடியும். ஏனெனில் முழுமையாக செங்குத்தான பாதையாக இந்த பாதை இருக்கும்.

கேர்பின் பெண்ட்டுகள் அதிகமாக இருக்கும். பெருமாள் மலை தொடங்கி அடுக்கம் கடந்து கும்பக்கரை அருவி வரை இருசக்கர வாகனத்தை இயக்கமாலேயே கீழே வந்துவிட முடியும். அந்த அளவிற்கு செங்குத்தான மற்றும் மிக ஆபத்தான வளைவுகள் கொண்ட பாதையாகும். இதில் அனுபவம் உள்ளவர்களே ஓட்டி செல்ல முடியும்.

அதேநேரம் ஜீப், கார்களில் சிறு தவறும் ஆபத்தை ஏற்படுத்தும். மழைக்காலங்களில் கண்டிப்பாக இந்தசாலையில் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கூட போகக்கூடாது. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ள மிகவும் திரில்லான சாலையாகும். இங்கு உள்ள சாமக்காட்டு பள்ளம் பகுதியில் ஜீப்பில் சென்ற பெண் உயிரிழந்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

kodaikanal adukkam Road What happened to Ooty girl Deepika who came to Kodaikanal for a wedding

திண்டுக்கல் கொடைக்கானல் அருகே பெருமாள் மலை கிராமம் உள்ளது. சாமக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. செல்லதுரைக்கு ராஜசேகரன் என்ற மகனும் ஒரு மகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் செல்லதுரையின் மகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. செல்லதுரையின் மகள் திருமணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்ததாக கூறப்படக்கூடிய இந்நிலையில் தீபிகா என்ற பெண் ஊட்டியை பூர்வீகமாக கொண்டவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று செல்லதுரையின் மகள் திருமணத்திற்காக வந்த தீபிகாவை செல்லதுரையின் மகன் ராஜசேகரன் அழைத்துச் செல்லும் போது செல்லதுரையின் தோட்ட பகுதியை பார்வையிட ராஜசேகரன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ராஜசேகரன் மற்றும் தீபிகா (22) பயணித்த ஜீப் வாகனம் செல்லதுரையின் தோட்டம் அருகே உள்ள சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தீபிகா உயிரிழந்து விட்டார். இரவு முழுக்க படுகாயங்களுடன் துடிதுடித்த ராஜசேகரன் தற்போது முதற்கட்ட சிகிச்சை முடித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபிகாவின் உடலை போலீசார் மீட்ட நிலையில் தற்போது தீயணைப்பு துறையினர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+