Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெண்டு லட்டு திண்ண ஆசையா? மகளிர் உரிமைத் தொகை + PHH ஆக மாறும் NPHH ரேசன் கார்டு! குட் நியூஸ் மக்களே!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் விடுபட்டு போன தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். மேலும், NPHH (முன்னுரிமை அற்ற) குடும்ப அட்டையில் இருந்து PHH (முன்னுரிமை) குடும்ப அட்டைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இவ்விழாவில் 44 பயனாளிகளுக்கு ரூ.36.87 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி," தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

Magalir Urimai Thogai

உங்களுடன் ஸ்டாலின்

அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு வீடு தேடிச் சென்றடைய வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் விடுபட்டு போன தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

தமிழக அரசு

மேலும். இம்முகாமில் மனு அளிக்கும் 60 வயதினை தாண்டியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள், கழிப்பறை வசதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

முன்னுரிமை குடும்ப அட்டை

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி," தமிழ்நாட்டில் மொத்தம் 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 5 இலட்சம் குடும்ப அட்டைகளை NPHH(முன்னுரிமை அற்ற) குடும்ப அட்டையில் இருந்து PHH (முன்னுரிமை) குடும்ப அட்டைகளாக மாற்ற அனுமதி வழங்கி உள்ளார்கள். அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 13,700 NPHH(முன்னுரிமை அற்ற) குடும்ப அட்டையில் இருந்து PHH (முன்னுரிமை) குடும்ப அட்டைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நலம் காக்கும் ஸ்டாலின்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அதிகமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். நலம் காக்கும் ஸ்டாலின் மற்றும் தாயுமானவர் திட்டம் நடைபெற்று வருகிறது. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில 1 முதல் 5-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவு படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார். எனவே, அரசு அறிவிக்கின்ற திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு சென்றடையும் வகையில் உங்கள் பணி சிறப்பாக இருக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+