காரில் ஜோதிமணி இறங்கியதுமே.. குறுக்கே வந்து நின்ற திண்டுக்கல் நபர்.. உடனே நாயை தூக்கி கொஞ்சி! ஓ காட்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை "VBG RAMG" என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. மேலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினரும் இன்றைய தினம் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை திட்டம் என்பதற்கு பதிலாக விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Dindigul Jothimani Dog

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமூக சொத்துக்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளன, வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளன.

100 நாள் வேலை திட்டம் - பெயர் மாற்றம்

இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என சமூகத்தின் பலவீனமான பகுதியினர் வருமான வாய்ப்பு காரணமாக சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கை சூழலை பெற்று வருகின்றனர்.. நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் அடிப்படை காரணமாகும்.

அதுமட்டுமல்ல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின் 41-வது பிரிவால் வழங்கப்படும் உரிமைகள் சார்ந்த சட்டமாகும். இது குடிமக்களின் வேலை செய்யும் உரிமையைப் பாதுகாக்க அரசை வலியுறுத்துகிறது,

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

ஆனால் எந்தவித விவாதமோ, ஆலோசனையோ இல்லாமலும், நாடாளுமன்ற நடைமுறைகள் அல்லது மத்திய-மாநில உறவுகளுக்கு மதிப்போ அளிக்காமல் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது... மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி இருப்பது வெறும் ஒரு முனையளவுதான்.

ஆனால் அந்த திட்டத்தின் மிகவும் இன்றியமையாத அதன் அடிப்படைக் கட்டமைப்பே அழிக்கப்பட்டுவிட்டது. வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக நாட்களாக உயர்த்தியுள்ளதாக மோடி அரசு போலியான கூற்றுகளை முன்வைத்து வருகிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது..

திண்டுக்கல் ஜோதிமணி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்கள் தோறும், எம்பி ஜோதிமணி பிரச்சாரம் செய்து வருகிறார்...

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி கிராமத்திற்கு ஜோதிமணி இன்று வருகை தந்திருந்தார்..

எங்க தொகுதிக்கு என்ன செஞ்சீங்க

அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிமணி பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு இளைஞர் அங்கு வந்தார்.. ஜோதிமணியிடம், எங்கள் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்டு ஜோதிமணியிடம் வாக்குவாதம் செய்தார்..

இதனை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், அந்த இளைஞரை அங்கிருந்து விரட்டியடிக்க முயன்றனர்.

ஆனாலும், அந்த இளைஞர் விடவில்லை.. "என்னை அடி.. ஆனால் எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள், பதில் வேண்டும்" என்று அவர்களிடம் கேட்டபடியே தகராறு செய்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களும் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு சொன்னார்கள்..

அதன்பிறகு அங்கிருந்த நகர்ந்த அந்த இளைஞர், தெருவில் சென்ற நாயை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது..

பெயரை குலைத்த மத்திய அரசு

பிறகு பொதுமக்களிடம் பேசிய ஜோதிமணி, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது.

இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மகாத்மா காந்தியின் பெயர் வைத்த காரணத்தினாலேயே மத்திய அரசு இத்திட்டத்தை முடக்கி விட்டது" என்று குற்றஞ்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+