அந்த பயங்கர மர்ம வெடி சப்தம்- தொடர் பீதியில் திண்டுக்கல் மாவட்டம்! யார் எப்ப பதில் சொல்வார்களோ?
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் பயங்கர வெடி சப்தத்தின் பின்னணி என்ன என்பது குறித்து நிர்வாகம் கனத்த மவுனம்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இடைவிடாத தொடர் வெடிசப்தங்கள் பொதுமக்களை பெரும் அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த மர்ம வெடி சப்தம் குறித்து ஒவ்வொருமுறையும் மாவட்ட நிர்வாகம் கனத்த மவுனம் காப்பது புரியாத புதிர் என்பது திண்டுக்கல் மாவட்ட மக்களின் குமுறல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் சரியாக 12.20 மணி.. அப்படி ஒரு பயங்கர வெடிசப்தம்.. மிதமான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்குவதைப் போல ஒரு அதிர்வு.. வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே அலறி அடித்து ஓடி வருகின்றனர்.. எங்கே இருந்து இந்த சப்தம் வந்தது? என்பது அனைவரும் எழுப்பிக் கொண்டிருந்த கேள்வி. ஒருவருக்கும் விடை தெரியவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் இன்று அதிகாலை 6 மணி.. டீ கடைகளில் நாளிதழ்களை புரட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும் திருவாளர் பொதுஜனங்களுக்கு பேசுபொருளாகவும் இந்த வெடி சப்தம்தான்.. இத்தனை வருஷமாக இப்படி ஒரு சப்தம் கேட்குதே.. ஒருத்தர் கூடவா பதில் சொல்லமாட்டாங்க? என்கிற ஆதங்கம் வெளிப்படுகிறது.
அப்படி என்னதான் திண்டுக்கல்லில் நடக்கிறது? திண்டுக்கல் மாவட்டத்தில் திடீர் திடீரென பயங்கர வெடி சப்தம் நிலத்துக்கு கீழே, வான் பரப்பில் கேட்பது உண்டு. இது ஏதோ ஒரு சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டுமல்ல.. திண்டுக்கல் மாவட்டத்தின் திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், குஜிலியம்பாறை என பல பகுதிகளில் ஒரே நேரத்தில் குலைநடுங்க வைக்கிற பெரும் சப்தமாக இருக்கிறது. இப்படியான சப்தங்களுக்கு என்னதான் காரணம்? எத்தனையோ முறை பத்திரிகைகள் இதுபற்றி செய்தி வெளியிட்டாலும், ஆய்வு செய்கிறோம்.. விசாரணை நடக்கிறது என்பதுதான் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பத்தாண்டுகால பொத்தாம் பொதுவான பதில்.
திண்டுக்கல் வான்பரப்பில் மிகப் பயங்கர பேரிரைச்சல் கேட்கும்.. அப்போது வீடுகளின் ஜன்னல்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது போல அதிர்ந்து ஓயும். திண்டுக்கல் வான்பரப்பில் ஜெட் விமானங்கள் பறப்பதாக சொல்லப்படும் அல்லது போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்தன என அடித்துவிடப்படும். திண்டுக்கல் மாவட்டத்துக்கும் விமானத்துக்கும் தொடர்பே கிடையாது. கோவை சூலூர், தஞ்சாவூரில்தான் விமான படை தளங்கள் உள்ளன. ஆனாலும் போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்திருக்கலாம் என பொதுமக்கள் சமாதானம் அடைவர்.
அதேபோல பயங்கர வெடிசப்தம் கேட்கும்.. அப்போதும் திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான ரெங்கமலை, கருமலை விவகாரம்தான் பேசப்படும். ரெங்கமலை, கருமலைப் பகுதியில் பல ஆண்டுகளாக மத்திய புவியியல் துறையினர் ஏதோ ஒரு மிக முக்கியமான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் குறியீட்டு கற்களையும் ஊன்றி வைத்திருக்கின்றனர். திண்டுக்கல் புறநகரில் மத்திய புவியியல் துறை அதிகாரிகள் முகாமிட்டு நாள்தோறும் ரெங்கமலை, கருமலை பகுதிக்கு சென்று ஆய்வும் நடத்துகின்றனர்.
ஆனால் ரெங்கமலை, கருமலை பகுதிகளில் என்ன ஆய்வு நடக்கிறது என்பது பகிரங்கமாக சொல்லப்படவே இல்லை. நியூட்ரினோ திட்டம் போல ஏதேனும் இப்பகுதியில் செயல்படுடுத்த ஆய்வு நடக்கிறதா? என்பதும் தெரியாத மர்மம். செம்பு, காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான தனிமங்கள் இந்த மலைகளில் கொட்டி கிடக்கிறது என்கிறது ஒரு தரப்பு. ரெங்கமலையில் தங்க தாதுபடிமங்கள் இருக்கிறது என்கிறது மற்றொரு தரப்பு. ஆனால் எந்த அரசாங்க தரப்பும் எதனையும் இதுவரை பகிரங்கமாக அறிவித்ததும் இல்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இந்த பயங்கர சப்தங்கள் தொடர் கதையாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் எந்த கருத்தையும் சொல்லாமல் கடந்து போகிறது. திண்டுக்கல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளாவது தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு என்னதான் நடக்கிறது என்கிற உண்மையை என்றுதான் சொல்வார்களோ? என்பது எதிர்பார்ப்பு.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications