Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன கண்றாவிங்க இது.. குமட்டும் ஆபாசம்! அறைகுறை ஆடை.. ஆபாச நடனம்! கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆபாச அசைவுகளுடன், அரைகுறை ஆடைகளுடன், ஆபாச நடனம் அரங்கேறியது பெண்களை முகம் சுளிக்க வைத்தது. கோவில் திருவிழாக்களை ஆபாச நடனங்கள் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை முன்னிலையிலேயே இந்த அவலம் அரங்கேறியதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழ்நாடு ஆன்மீக மாநிலம் மட்டுமல்ல, கலை, கலாச்சாரம் என பன்முகத் தன்மை கொண்ட மாநிலம். தமிழகம் முழுவதும் கோவில் திருவிழாக்கள் என்றாலே கொண்டாட்டம் தான். கடந்த காலங்களில் கோவில் திருவிழாக்கள் என்றால், கரகாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம் மற்றும் புராண நாடகங்கள் ஆகியவை நடத்தப்படும்.

ஆனால் காலப்போக்கில் நாகரிகம் என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இருந்த அந்த நிகழ்ச்சிகள் தற்போது ஆபாச கூத்துகள் அரங்கேறும் தளமாக மாறிவிட்டது. அரைகுறை ஆடைகளுடன் கவர்ச்சி காட்டும் பெண்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

dindigul police festival

இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவில் திருவிழாக்களை ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் எச்சரித்து இருந்தது. தென் மாவட்டங்களில் குறிப்பாக திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கலை, கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டில் சினிமா பாடல்களை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

ரெக்கார்ட் டான்ஸ், காபரே டான்ஸ் நடனமாக மாறி தற்போது ஆடல் பாடல் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. அதன் பெயரில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆடல் பாடலில் ஆபாசம் இருக்கக் கூடாது. ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்தந்த பகுதி காவல் துறையினரை அனுமதி வழங்கலாம் எனவும் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

dindigul police festival

ஆனால் கடந்த சில மாதங்களாகவே திண்டுக்கல்லில் அந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டது வருகிறது. வேடசந்தூர், சாணார்பட்டி, திண்டுக்கல் என பல்வேறு பகுதிகளில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் மா.மு.கோவிலூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி அளவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப முதலே அதிகப்படியான சத்தத்துடன் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரம்பத்தில் முறையாக நடனம் ஆடிய நடன குழுவினர் நேரம் செல்ல செல்ல அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனத்தை அரங்கேற்றனர். ஒரு கட்டத்தில் நடனமாடிய பெண்களின் செயல்கள் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் பெண்கள் கூடி இருந்த நிலையில் அவர்களது நடன அசைவுகளை பார்க்க முடியாமல் குனிந்து கொண்டனர் பெண்கள்.

dindigul police festival

கோவிலுக்கு அருகே இந்த ஆபாச கூத்துக்கள் அரங்கேற இதனை தட்டிக் கேட்க வேண்டிய காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சியை ஆர்வத்தோடு பார்த்தது தான் கொடுமையிலும் கொடுமை. ஏற்கனவே தவறான நிகழ்ச்சிகளால் இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவில் திருவிழாக்களில் இதுபோன்ற சமூக சீர்கேடு நிகழ்ச்சிகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அதனையும் மீறி அதுவும் காவல்துறையினர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+