Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி துப்பாக்கி போல பட் பட் என சுட்ட தியேட்டர் அதிபர்- படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி

Subscribe to Oneindia Tamil

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் (பழநி) நிலத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Recommended Video

    பழனி: ‘பஞ்சாமிர்த’ பழனியை உலுக்கிய ‘டுமீல்’ சம்பவம்.. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி..!

    பழனியில் தியேட்டர் உரிமையாளர் நடராஜனுக்கும் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே ரூ1 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே திங்கள்கிழமையன்று வாக்குவாதம் நடந்தது.

    One Person died in Palani shooting incident

    இந்த வாக்குவாதத்தின் போது தம்மிடம் இருந்த கைத்துப்பாக்கியால் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் அடுத்தடுத்து சுட்டார். இதில் சுப்பிரமணி, பழனிசாமி இருவரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சுருண்டு விழுந்தனர்.

    இதனையடுத்து இருவரும் பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சுப்பிரமணி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

    One Person died in Palani shooting incident

    இதனிடையே தமது கை துப்பாக்கியுடன் போலீசில் நடராஜன் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஏற்கனவே வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+