இஸ்லாமிய பெண் உயிரிழப்பு.. விநாயகர் சிலை வழியே இறுதி ஊர்வலம்.. ஓம் காளி என முழக்கமிட்ட நபர்கள்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விநாயகர் சிலை வைக்கப்பட்ட கோவில் வழியாக இறந்த இஸ்லாமிய மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பலத்த போலிசார் பாதுகாப்புடன் உடலை கொண்டு சென்ற போது விநாயகருக்கு பூஜை செய்து கோசமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்று நாள் பூஜைகளுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைத்து வருகின்றன.
தடை செய்யப்பட்ட பகுதிகள் போலீசார் அனுமதி மறுத்த பகுதிகள் பதட்டம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது மேலும் போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விநாயகர் சிலை வைக்கப்பட்ட கோவில் வழியாக இறந்த இஸ்லாமிய மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் 9 வார்டு பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் உசேன் முகமது மனைவி குல்ஜாரா பேகம் (64 ) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இஸ்லாமியர்களின் அடக்க ஸ்தலமான கோட்டை காளியம்மன் தெரு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு இறந்தவரின் உடலை கோட்டை காளியம்மன் கோவில் வழியாகத்தான் இருந்தவரின் உடலை எடுத்துச் செல்வது வழக்கம்.
திருவிழா மற்றும் நேரங்களில் மாற்றுப் பாதையில் சென்று வருவார்கள். இந்நிலையில் கோட்டை காளியம்மன் கோவில் முன்புறம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வருவதால் காளியம்மன் கோவில் வழியாக பிரேதத்தை கொண்டு செல்லக்கூடாது என அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் உடலை அடக்கம் செய்ய முடியாமல் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இச்சம்பவம் குறித்து பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன்,ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன் , தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் அப்போது துக்க வீட்டினரிடமும் ,பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் இருபுறம் போலிசார் நின்று பாதுகாப்புடன் இறந்தவரின் இஸ்லாமிய மூதாட்டியின் உடலை அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது கோவில் வழியாக உடலை எடுத்துச் செல்லும்போது விநாயகர் சிலை வைத்திருந்த அப்பகுதி மக்கள் திடீரென விநாயகருக்கு தீபாராதனை காட்டியும் , ஒம்காளி ,ஜெய் காளி ,பாரத் மாதாகீ ஜெய் என்று கோஷங்களை எழுப்பியும் திடிரென கோஷமிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications