எனக்கே விபூதி அடிக்க பார்த்தீல்ல ! பழனி ஆண்டவனிடமே ஆட்டைய போட்ட உதவி பேராசிரியை.. சிக்க வைத்த சிசிடிவி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியின் போது , ஒரு லட்சம் ரூபாயை திருடிய கல்லூரி உதவி பேராசியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

Dindigul Palani Crime CCTV

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் பக்தர்கள் வரும் நிலையில் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசிக்க வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வைகாசி மாதம் மற்றும் முகூர்த்த தினங்கள் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது.

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தங்களது காணிக்கை செலுத்துவது வழக்கம் பணம், தங்க வெள்ளி நகைகள் அமெரிக்க டாலர்கள் என பல்வேறு வகையான காணிக்கைகளை பாகதர்கள் செலுத்துவார்கள். இதற்காக கோவில் வளாகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்துவர்.

Dindigul Palani Crime CCTV

இந்த பணமானது மாதம் ஒருநாள் எண்ணப்படுவது வழக்கம். திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலை மீது நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பழநி மலை கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக ஒரு கோடியே 66 லட்சத்து 26 ஆயிரத்து 850 ரூபாயை பக்தர்கள் கணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் தங்கமாக 778 கிராம், வெள்ளியாக 12,39 கிராம். வெளிநாட்டு கரன்சி 427 நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாளும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் காணிக்கை தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dindigul Palani Crime CCTV

இதற்கிடையே உண்டியல் எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த போது ரூ. 1 லட்சம் பணம் திருடிய கல்லூரி உதவி பேராசிரியரான ஸ்வேதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது. இதையடுத்து கோயில் பெண் ஊழியர்கள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

Dindigul Palani Crime CCTV

அப்போது ஸ்வேதா கோவில் உண்டியல் பணத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயை திருடி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தைப் கோவில் ஊழியர்கள் பறிமுதல் செய்து, திருட்டில் ஈடுபட்ட அவரை அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணம் திருட்டில் பிடிபட்ட அவர் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஸ்வேதா இதுபோல உண்டியல் எண்ணிக்கையில் கலந்துகொண்டு பணத்தை திருடி உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+