கட்சில இருந்து தூக்கியாச்சு! உள்ளூரில் விஸ்வநாதனுக்கு எதிராக புரட்சிப் படை! அதிமுகவினர் அட்ராசிட்டி!
திண்டுக்கல் : அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.
அவர் செல்லும் போது, அவருடைய வாகனத்தை பஞ்சர் ஆகிய சிலர், அவரைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா செய்யாததை செய்த ஓபிஎஸ்! தூக்கியே ஆகனும்! கங்கணம் கட்டி களமிறங்கிய இபிஎஸ்! ஜுலை 11 ட்விஸ்ட்!

பொதுக்குழு
முன்னதாக இந்தக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், இபிஎஸ்ஐ ஒற்றைத் தலைமையாக கொண்டுவர பொதுக்குழு உறுப்பினர்கள் விரும்புவதாக அறிவித்தார். இதனைக் கண்டித்து ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் அடுத்த பொதுக்குழு ஜுலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ல நிலையில், அதிமுக போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.

போஸ்டர் யுத்தம்
இந்நிலையில் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையம், மெயின் பஜார், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் கைகாட்டிய ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக வத்தலக்குண்டு மக்கள். எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர்
இதுகுறித்து போஸ்டர் ஒட்டிய எம்ஜிஆர் மன்ற ஒன்றிய நிர்வாகி செல்லத்துரையிடம் கேட்டபோது," அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இன்றளவும் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவரை கட்சியை விட்டு நீக்கம் எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்து போஸ்டர் ஒட்டி தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருப்பதாக கூறினார்.

திண்டுக்கல் சீனிவாசன்
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில் அமைதியாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முதன்முறையாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நத்தம் விஸ்வநாதன் எடப்பாடி பக்கம் தாவிய நிலையில் அவரது அரசியல் எதிரியான திண்டுக்கல் சீனிவாசனும் எடப்பாடி தரப்பிலேயே தான் உள்ளார். ஆனால் இந்த போஸ்டரில் திண்டுக்கல் சீனிவாசனின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.