இவ்வளவு நாளா எங்கயா இருந்த? வருஷ கடைசியில் ஷாக் கொடுத்த மல்லிகை! விலையைக் கேட்டாலே மயக்கம் வருதே!
திண்டுக்கல்: தொடர் மழை மற்றும் பனிப் பொழிவின் காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும், புத்தாண்டில் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளதாலும் திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ரூ.4500 முதல் ரூ.5000வரை விற்பனையாகிறது.

திண்டுக்கல் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பூ வணிக வளாகத்திற்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, நத்தம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

மேலும் இங்கிருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தினசரி பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் பூ சந்தை:
தமிழ்நாட்டிலேயே தோவாளைக்கு அடுத்தப்படியாக பூ மார்க்கெட்டிற்கு பெயர் பெற்ற திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை உதிரி பூக்கள் ரூ.4500 வரை விலை போகிறது. இதற்கு காரணம் மார்கழி மாத கோவில் விழாக்கள் மற்றும் தொடர்ந்து புத்தாண்டு உள்ளிட்ட உள்ளது என்பதேயாகும். அதுமட்டுமல்ல கடும் மழை மற்றும் இரவு நேரங்களில் பனிப் பொழிவால் மல்லிகை பூ சாகுபடியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு மல்லிகை பூவின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூ:
மல்லிகைப் பூ எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் திருமணம் என்றாலும், பிற சுப நிகழ்ச்சிகள் என்றாலும் பெண்கள் மல்லிகைப் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. இதனால் விலை அதிகமாக இருந்தாலும் அதனை விஷேச வீட்டுக்காரர்கள் மார்க்கெட்டிற்கே சென்று கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

தேவை அதிகரிப்பு:
அதேபோல் காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா என பல சுபநிகழ்ச்சிகளுக்கும் மல்லிகை பூ அவசியம் தேவை என்பதால் அதன் விலை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மார்கழி மாதத்தில் அதிக அளவு சுப முகூர்த்தங்கள் இல்லை என்றாலும், சில பகுதிகளில் திருமணங்கள், புதுமனை புதுவிழா, கோவில் விழாக்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

பனிப் பொழிவு:
ஆனால், கனமழை, பனி பொழிவு உள்ளிட்ட காரணங்களால் வரத்து சரிந்துள்ளதால், மல்லிகை பூவின் விலை குறைய வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தை, மாசி வரை வரும் மாதங்களிலும் விலை உயர்வாகவே இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள். தற்போதைய சூழலில் திண்டுக்கல் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ ஒரு கிலோ 4500க்கும், முல்லை பூ 1100 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும்
ஜாதிப்பூ 800 ரூபாய்க்கும் காக்கரட்டான் 750 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

விலை உச்சம்:
மேலும் அரளிப்பூ 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஜா 300 ரூபாய்க்கும், ரோஜா பூ கட்டு 300 ரூபாய்க்கும்,
சம்பங்கி 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 220 ரூபாய்க்கும், செவ்வந்திப் 150 ரூபாய்க்கும் தாமரை பூ ஒன்று 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குறைந்தபட்சமாக வாடாமல்லி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தாமரை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது.

-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications