திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாமே ஓபன் தான்! பயப்படாதீங்க ஐயா! டவுட் கிளப்பிய ராமதாஸ்.. அமைச்சர் ஐபி கொடுத்த விளக்கம்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணி நியமனங்கள் சரியாக நடக்குமா? என பாமக நிறுவனர் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், இந்த தேர்வில் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு எந்த ஐயப்பாடும் தேவையில்லையென தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது.

இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட அளவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த நியமனங்கள் சரியாக நடக்குமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் டவுட் கிளப்பிருந்தார்.

 இந்த 3 போட்டோஸை பாருங்க.. காங்கிரஸ் தலைவர் ரிசல்ட் ஈஸியா தெரிஞ்சிடும்.. இவர்தான் அடுத்த தலைவரா? இந்த 3 போட்டோஸை பாருங்க.. காங்கிரஸ் தலைவர் ரிசல்ட் ஈஸியா தெரிஞ்சிடும்.. இவர்தான் அடுத்த தலைவரா?

ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

இந்நிலையில் இது போன்ற ஐயங்கள் தேவையில்லை என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 4000க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு மையங்கள் மூலம் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்திருக்கிறது. இந்த நியாய விலை கடை விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது

ஆன்லைன் விண்ணப்பங்கள்

ஆன்லைன் விண்ணப்பங்கள்

. இந்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கூடிய விரைவில் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்"தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4,403 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் கடை விற்பனையாளருக்கு ரூ 8,500 சம்பளம், எடையாளருக்கு 6,500 சம்பளம் தொகுப்பு ஊதியம் மூலம் வழங்கப்பட உள்ளது. இட ஒதுக்கீட்டின் பேரிலும், சமூக நீதி அடிப்படையிலும் சமமாக எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

 வெளிப்படைத் தன்மை

வெளிப்படைத் தன்மை

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் ஆகிய இரண்டையும் சேர்த்து யார் அதிகளவு மதிப்பெண் வாங்குகிறார்களோ அவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் எந்த தவறும் நடப்பதற்கு வழியில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. அரசியல் தலையீடு இருக்காது. எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு, எந்த புகாருக்கும் இடம் இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பாமக ராமதாஸ்

பாமக ராமதாஸ்

இதில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும். தேர்வு எப்படி நடத்துவது என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு எந்த ஐயப்பாடும் தேவையில்லை. அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையான முறையில் தேர்வு நடை பெற இருக்கிறது" என்று கூறினார்.

English summary
Tamil Nadu Cooperative Minister Periyasamy has said that there is no doubt about pmk founder Ramadoss on filling the co-operative posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X