பழைய ஓய்வூதிய திட்டம்.. தந்தை கொடுத்ததை பறித்த மகன்! கோபத்தில் ஆசிரியர்கள்..ஐபெட்டா அண்ணாமலை சுருக்!
திண்டுக்கல்: ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்னதையும் செய்யவில்லை, சொல்லாததையும் செய்யவில்லை, கொடுத்த வாக்குறுதிகளையும் செய்யவில்லை எனவும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது மு.க.ஸ்டாலின் கூறியதில் தற்போது ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பான 'ஐபெட்டா' தேசிய செயலர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆசிரியர் பணியில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றவர்களை விருது வழங்கும் விழா மற்றும் ஐபெட்டா அண்ணாமலையை அகில இந்திய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது .
தொடர்ந்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும் ஐபெட்டா அகில இந்திய செயலாளருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"இந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்பதை கொள்கை முடிவாக எடுத்துள்ளது மத்திய அரசு.

ஆனால் தமிழக முதல்வர் நிதியை நிறுத்தினாலும் சரி நிதி அதிகமாக கொடுத்தாலும் சரி இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என உறுதியாக உள்ளார். இதனை தமிழக ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. 1 முதல் 8 வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை இருந்து வருகிறது. இது குழந்தைகள் படிப்பை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். ஆனால், 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த வகுப்பு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர். ஆனால், இதனை தமிழக அரசு ஏற்கவில்லை. தற்போது வரை கட்டாய தேர்ச்சி முறையே தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.
சிபிஎஸ்சி பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 30% கட்டாய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் இல்லை என்றால் மறு தேர்வு எழுதலாம் அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மற்றும் 22 மாநிலங்களில் உள்ள ஐபெட்டா அமைப்பு சார்பிலும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டில் தான் உள்ளோம். சிபிஎஸ்சி வாரியத்தை பொருத்தவரை ஒரு வணிக நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. வணிக நிறுவனம் குழந்தைகளின் தலை எழுத்தை நிர்ணயம் செய்யக்கூடாது. என தமிழக அரசு எதிர்க்கிறது இதற்கு நாங்கள் வரவேற்பு அளிக்கிறோம்.
தமிழக அரசு மாணவர்களுக்காக கொண்டுவந்துள்ள அனைத்து திட்டங்களையும் வரவேற்கிறோம். தற்போது ஒன்பது அறிவிப்புகளை தமிழக அரசு வழங்கியுள்ளனர். அறிவிப்புகள் ஆணையாக வெளிவர வேண்டும். அந்த ஆணை அமல்படுத்த பட வேண்டும். அகவிலைப்படி அன்றைய காலகட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் முடக்கப்பட்டது. தற்போது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் கருணாநிதி இருந்த பொழுது விடுப்புகளை பணமாக்கலாம் என்ற அறிவிப்பை கொடுத்திருந்தார். ஆனால் 4 வருடங்களாக தற்போது இதனை கொடுக்கவில்லை.
அவரது தந்தை கொடுத்ததை ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பி தற்போது சட்டமன்றத்தில் அறிவித்துள்ளனர். ஆனால், அது காமெடி அறிவிப்பாக உள்ளது. 01.01.26 ஈட்டிய விடுப்பிற்கான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். அதற்கான நிதி தற்போது ஒதுக்கப்படவில்லை. எனவே தங்களை காமெடியாக நினைக்கிறீர்களா எனக் கூறி போராட்டத்தை அறிவித்துள்ளோம். தற்போது, 01.10.25 அதனை எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சட்டங்களில் ஒன்று கொரோனா காலங்களில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் அறிவிப்பு வந்துள்ளது.
10 லட்சம் பேருக்கு இது அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கிறது என்பதால் வரவேற்கிறோம். ஆனால் இது புதிய அறிவிப்பு இல்லை. திருமண கடன் 5000 வாங்கியவர்களுக்கு தற்போது 5 லட்சமாக உயர்த்தப்படும் என கூறியுள்ளனர். நிதி இல்லாமல் இத்திட்டம் எவ்வாறு அமல்படுத்தப்பட போகிறது என்று தெரியவில்லை. ஆனால், இத்திட்டத்தில் பெரும் பணம் மீண்டும் செலுத்தக்கூடிய ஒன்று. நாங்கள் எதிர்பார்த்தது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். 6.25 லட்சம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆட்சி அமைத்தவுடன் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியிருந்தனர். ஆனால் 4 வருடங்கள் முடிவடைந்து விட்டது தற்போது குழு அமைத்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி குழு அமைப்பதும் கல்லை தூக்கி போடுவதும் ஒன்று என கூறியுள்ளார். தற்போது போராட்டத்தின் நடவடிக்கையால் குழு அறிக்கையை செப்டம்பர் மாதத்தில் அமல்படுத்துவோம் என தமிழக அரசு கூறியுள்ளது. மொத்தமாக ஒன்றரை கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. என்றால் 200 தொகுதி 234 தொகுதி என்று வெற்றி பெறுவோம் என்று கூற முடியாது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்கு வங்கியை பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆனால் அவரது மகன் தற்போது இந்த வாக்கு வங்கியை இழந்து கொண்டு இருக்கிறார். மகப்பேறு விடுப்பில் 12 மாதங்கள் எடுப்பதன் மூலம் பதவி உயர்வு பாதிக்கப்படாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கல்வித்துறையில் 15000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது ஸ்டாலின் கூறியதில் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. நீட் தேர்விற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறோம்.
இவர் எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது 80 ஆயிரம் பேர் தகுதி தேர்வில் பாஸ் செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் வேலைக்கு எடுத்துக் கொள்வோம் என கூறினார். ஆனால் தற்போது நியமன தேர்வு இவர்களே வைக்கின்றனர். இடைநிலை ஆசிரியர், முதல்நிலை ஆசிரியர் சம்பள விகிதங்கள் வித்தியாசமாக உள்ளது என கூறிய போது அதனை ஆட்சிக்கு வந்தவுடன் சரி செய்யப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் எதையும் செய்யவில்லை.
எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இல்லாத தொடக்க கல்வி ஆசிரியர் முன்னுரிமை பட்டியல் ஒன்றிய அளவில்தான் இருக்கும் பெண் ஆசிரியர் அதிகமாக பணியாற்றுவதால் அவர்கள் பதவி உயர்வு மற்றும் டிரான்ஸ்பர் செல்ல வேண்டும் என்பதற்காக இருந்ததை தற்போது ஸ்டாலின் காலத்தில் 243 சட்டம் கொண்டு வரப்பட்டு 80% ஆசிரியர்கள் பதவி உயர்வு செய்யாமல் மாறுதல் பெற முடியாமல் உள்ளனர். கொடுத்தது தந்தை பறித்தவர் மகன் இதற்கு விடிவு காலம் எதுவும் ஏற்படவில்லை.
மும்மொழி கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக ஹிந்தி பேசும் மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழக அரசு முடிவு மட்டுமல்லாமல் எங்களது கொள்கை முடிவிலும் மும்மொழி கொள்கை திட்டத்தை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ள மாட்டோம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது போல் ஒரு மொழி படித்து பிச்சை எடுப்பது நம் ஆட்கள் இல்லை. தமிழக அரசு அமைத்துள்ள ஓய்வூதிய குழுவின் முடிவு ஆசிரியருக்கு எதிராக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு
மத்திய அரசின் கொள்கை பிடிக்கவில்லை. இதேதான் தமிழக அரசிற்கும். மத்திய அரசை ஏற்று கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டு மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள். தேர்தல் வாக்குறுதிகள் ஸ்டாலின் தெருத்தெருவாக வந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சத்தியம் செய்துள்ளீர்கள். இதை நிறைவேற்ற வில்லை என்றால் துரோகம் மாடல் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் தற்போது வரை நம்பி உள்ளோம்.
அரசியல் போல் ஆசிரியர்கள் பேச முடியாது. ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்னதையும் செய்யவில்லை. சொல்லாததையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் செய்யவில்லை எங்களை பொறுத்தவரையில். சிபிஎஸ்இ - 5ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு கட்டாய தேர்வு என்ற கொள்கை எதிர்த்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதாப் வீட்டின் முன்பு 22 மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களை ஒன்று திரட்டி போராட உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications